புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கமல் ஹீரோயிசம் காட்டாத 6 படங்கள் .. உண்மையிலே இவர் பைத்தியமா என யோசிக்க வைத்த மூன்று படங்கள்

கமல்ஹாசன் நடித்த படங்கள் பொதுவாகவே வித்தியாசமாகவும் மற்றும் எதார்த்தமாகவும் இருக்கும்.  இவர் கதையை உள்வாங்கி நடிப்பதில் சகலகலா வல்லவன். அத்துடன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர் சில படங்களில் எந்தவித ஹீரோயிசமும் காட்டாமல் நடித்திருக்கிறார். முக்கியமாக சில படங்களில் உண்மையிலே இவர் பைத்தியம் தானா என்று யோசிக்க வைத்திருப்பார்.  அப்படிப்பட்ட படங்களை பற்றி பார்க்கலாம்.

வருமையின் நிறம் சிவப்பு: கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வருமையின் நிறம் சிவப்பு திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் கமலஹாசன், ஸ்ரீதேவி, பிரதாப் போத்தன் மற்றும் எஸ்.வி சேகர் ஆகியோர் நடித்தார்கள். இப்படம் படித்து வேலை இல்லாமல் வறுமையில் போராடும் இளைஞர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இதில் கமல் நடிப்பு கதைக்கு ஏற்ற மாதிரி எதார்த்தமான நடிப்பாலும் மற்றும் மக்களுக்காக குரல் எழுப்பியும் நடித்திருப்பார்.

Also read: ரஜினி போல் பிழைக்கத் தெரியாத கமல்.. நல்லது செஞ்சும் வாங்கும் கெட்ட பெயர்

பேசும் படம்: சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு பேசும் படம் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமலஹாசன், அமலா மற்றும் பிரதாப் போத்தன் ஆகியோர் நடித்தார்கள். இத்திரைப்படம் எவ்வித உரையாடலும் இல்லாமல் எடுக்கப்பட்ட படமாகும். அதே மாதிரி இந்த படத்தில் ஒரு பெரிய சிறப்பாக இருப்பது இதில் நடித்த அனைத்து கேரக்டருக்கும் எவ்வித பெயரும் கிடையாது. இப்படத்தின் முக்கிய கருத்து “குறுக்கு வழியைத் தேடாதே”. இப்படம் வெளிவந்த போது நல்ல வரவேற்பையும், நல்ல வசூலையும் பெற்றது.

16 வயதினிலே : பாரதிராஜா இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு 16 வயதினிலே திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த், காந்திமதி மற்றும் கவுண்டமணி ஆகியோர் நடித்தார்கள். இப்படம் 16 வயது பள்ளி மாணவியான ஸ்ரீதேவிக்கு வரும் பாதிப்புகளிலிருந்து எதிர்கொள்ளும் மற்றும் சமாளிக்கும் சவால்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும். இதில் கமலஹாசன் சப்பானி என்ற கேரக்டரில் நடித்திருப்பார். இதில் இவரின் நடிப்பை பார்த்த பலரும் இவர் உண்மையிலேயே இப்படித்தான் என யோசிக்க வைத்திருப்பார். அந்தளவிற்கு கதைக்கு ஏற்ற மாதிரி எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.

Also read: விக்ரம் வெற்றியை போல் அடுத்த வெற்றிக்காக சரணடைந்த கமல்.. கிழித்து தொங்கவிட்ட சவுக்கு பிரபலம்

குணா: சந்தான பாரதி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு குணா திரைப்படம் வெளிவந்தது. இதில் கமலஹாசன், ரேகா, ரோஷினி ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் ஹீரோயினை கடத்தி சென்று அவரை காதலிப்பதாக கூறி அபிராமி தேவியின் அவதாரம் என்றும் அவரை திருமணம் செய்ய வேண்டும் என்று நினைப்பார். இதில் கமல்ஹாசன் மனநலம் குன்றியவர் போல் நடிப்பை செம்மையாக நடித்து வெளி காட்டி இருப்பார்.

அன்பே சிவம்: சுந்தர் சி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு அன்பே சிவம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் கமல்ஹாசன், மாதவன், கிரண், நாசர் மற்றும் சந்தன பாரதி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் இரண்டு வித்தியாசமான நபர்கள் ஒன்றாக பயணிக்கும் போது அவர்களுக்கு ஏற்பட்ட நிகழ்வுகளை பற்றி சொல்வதே இக்கதையாக எடுக்கப்பட்டிருக்கும். இதில் கமல்ஹாசன் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருப்பார். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது.

மூன்றாம் பிறை: பாலு மகேந்திரா இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு மூன்றாம் பிறை திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் கமலஹாசன், ஸ்ரீதேவி, ஒய் ஜி மகேந்திரன், சில்க் ஸ்மிதா ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் கமல்ஹாசன், பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை அந்த மாதிரி ஒரு இடத்தில் இருந்து மீட்டு அவருக்கு பாதுகாப்பாக அடைக்கலம் கொடுத்து வருவதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். பிறகு கிளைமாக்ஸில் ஸ்ரீதேவிக்கு இவரை அடையாளம் காட்டுவதற்காக சில விஷயங்கள் செய்யும்போது பைத்தியக்காரர் போல் நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.

Also read: 25 வருடங்களுக்கு முன்பு ஒரே நாளில் ரிலீஸ் ஆன 8 படங்கள்.. கமலுக்கு பயத்தை காட்டி ஹிட்டடித்த படம்

Trending News