ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

திருமணத்திற்கு பின் ஜோதிகா வெற்றி கண்ட 6 படங்கள்.. பாலாவுடன் நாச்சியாராக ஆடிய வேட்டை

90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை ஜோதிகா. பின் இவர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்பு குடும்ப வாழ்க்கையில் முழு கவனத்தையும் செலுத்தி வந்தார். அப்படிப்பட்ட இவர் சில ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் நடிப்பை தொடங்கி இருக்கிறார். திருமணத்திற்கு பின் ஜோதிகா வெற்றி கண்ட ஆறு படங்களை பற்றி பார்க்கலாம்.

36 வயதினிலே: ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு 36 வயதினிலே திரைப்படம் வெளியானது. இதில் ஜோதிகா, ரஹ்மான், அபிராமி மற்றும் நாசர் ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தின் மூலம் ஜோதிகா எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படத்தில் நடிப்பதற்கு திரும்பி வந்தார். இப்படத்தில் ஜோதிகாவின் நடிப்பு, உணர்ச்சிகரமான வசனம் மற்றும் சமூக செய்தி ஆகியவற்றை பாராட்டி அதிகளவில் விமர்சனங்களை பெற்றார். இந்தக் கதை மூலம் குடும்பத்தில் இருக்கும் பெண்களின் மனதில் ஆழமாக இடம் பிடித்து விட்டார்.

Also read: ஹீரோ, ஹீரோயின் இருவருமே இரட்டை வேடங்களில் நடித்த 5 படங்கள்.. ஜோடியாக நடித்த பேரழகன் சூர்யா, ஜோதிகா

செக்கச் சிவந்த வானம்: மணிரத்தினம் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. இதில் அரவிந்த்சாமி, ஜோதிகா, அருண் விஜய், சிம்பு,விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் அரவிந்த்சாமியின் மனைவியாக ஜோதிகா நடித்திருப்பார். இதில் ஜோதிகா கொஞ்சம் எதிர்மறையான கேரக்டராக இருப்பார். இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

காற்றின் மொழி: ராதா மோகன் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு காற்றின் மொழி திரைப்படம் வெளியானது. இதில் ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு ஆகியோர் நடித்தார்கள். இப்படம் சாதாரண குடும்பப் பெண்ணின் மனதில் இருக்கும் ஆசையை நிறைவேற்றும் விதமாக இக்கதை அமைந்திருக்கும்.

ராட்சசி:சையத் கவுதம்ராஜ் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு ராட்சசி திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் ஜோதிகா,ஹரீஷ் பேரடி, பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் நடித்தார்கள். இதில் ஜோதிகா, மோசமாக இயங்கும் பள்ளியை மாநிலத்தின் சிறந்த பள்ளியாக மாற்றும் தலைமை ஆசிரியராக நடித்திருப்பார். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றது.

Also read: 44 வயதிலும் மாறாத இளமை.. புது ஹேர் ஸ்டைலில் பார்பி டால் போல் ஜொலிக்கும் ஜோதிகா

உடன்பிறப்பே: சகாப்தம்.சரவணன் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு உடன்பிறப்பே திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் ஜோதிகா,சசிகுமார், சமுத்திரகனி ஆகியோர் நடித்தார்கள். இது கிராமத்தில் இருக்கும் அன்பான சகோதர, சகோதரிகளின் கதைகளை மையமாக வைத்து அமைந்திருக்கும். இந்த படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது மற்றும் ஜோதிகாவின் ஐம்பதாவது படமாகும்.

நாச்சியார்: இயக்குனர் பாலா இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு நாச்சியார் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் ஜோதிகா டைட்டில் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் ஜிவி பிரகாஷ் மற்றும் இவானா ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் ஜோதிகா அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்தப் படம் அந்த ஆண்டின் வணிக ரீதியான வெற்றிகரமான படங்களில் ஒன்றாக மாறியது.

Also read: கௌதம் மேனன் மொக்கை வாங்கிய 5 படம்.. கள்ளக் காதலியாக நடித்த பச்சைக்கிளி ஜோதிகா

Trending News