செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ரொமான்டிக் ஹீரோவை ஆக்சன் ஹீரோவாக மாற்றிய 6 படங்கள்.. ஆக்சன் படங்களில் முன்னணியாக வந்தவர்

தமிழ் சினிமாவில் ரொமான்டிக் ஹீரோவாக இருந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். பின்பு அதிரடி ஆக்ஷனில் களம் இறங்கி அதிலும் முன்னனி நடிகராக வளம் வரும் ஆறு நடிகர்களின் படங்களை பற்றி நாம் இப்போது பார்க்கலாம்.

அமர்க்களம் : அஜித் ஆரம்பத்தில் ரொமான்ஸ் படத்தின் மூலம் மட்டுமே நடித்து வந்து காதல் மன்னன் என்ற பெயரை வாங்கியவர். பின்பு இவர் 1999 ஆம் ஆண்டில் சரண் இயக்கத்தில் வெளிவந்த அமர்க்களம் படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக மாறினார். இந்தப் படத்தில் ரவுடியாக ஆக்ஷனில் களம் இறங்கி இருப்பார். இந்தப் படத்தில் தான் இவரது கேரியருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதைத்தொடர்ந்து இவர் இப்பொழுது வரை ஒரு ஆக்சன் ஹீரோவாக முன்னணியில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Also read: 3-வது முறையாக அஜித் செய்த சாதனை.. உலக அளவில் வசூலில் மிரட்டிய துணிவு

தில் : 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தில் திரைப்படம் தரணி இயக்கத்தில் விக்ரம்,லைலா,விவேக் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் புதிய பரிமாணத்தில் ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவும், அநாகரிகமாக நடந்து கொண்ட போலீசுக்கும், போலீஸ் ஆக வேண்டும் என்று துடிக்கும் இளைஞருக்கும் நடக்கும் போராட்டத்தை அதிரடி ஆக்ஷன் உடன் திரைக்கதை அமைத்திருப்பார்.

திருமலை : 2003 ஆம் ஆண்டு வெளிவந்த திருமலை படத்தை ரமணா இயக்கத்தில்,விஜய் நடித்திருப்பார். இந்தப் படம் இவருக்கு சினிமாவின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது. இந்தப் படத்தில் தான் புது ஸ்டைல் மற்றும் கெட்டப் என புதிய பரிமாற்றத்தில் நடித்திருப்பார். இந்த படம் தான் இவருக்கு ஆக்சன் ஹீரோவாக மாற்றுவதற்கு ஒரு முக்கியமான படமாக அமைந்தது. இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் ஆனது.

Also read: இந்திய அளவில் முதல் இடத்தில ட்ரெண்டிங் ஆன Me Vijay ! ட்விட்டரை தெறிக்கவிட்ட தளபதி ரசிகர்கள் – ஏன் தெரியுமா ?

நந்தா : 2001 இல் வெளிவந்த திரைப்படத்தை பாலா இயக்கியுள்ளார். இதில் சூர்யா லைலா ராஜ்கிரன் மற்றும் கருணாஸ் ஆகியோரியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இறுதி கிளைமாக்ஸ் பார்வையாளர்களின் ஈர்ப்பை அதிகரிக்க செய்தது. இது சூர்யாவின் சினிமா துறையில் ஒரு மைக்கல் படமாக அமைந்தது.

புதுப்பேட்டை : 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்தை செல்வராகவன் இயக்கி உள்ளார். இதில் தனுஷ்,சோனியா அகர்வால்,மற்றும் சினேகா நடித்துள்ளனர். முதலில் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களை கொண்டும் பாக்ஸ் ஆபிஸில் சராசரி தொடக்கத்தையும் பெற்றது. பின்பு அடுத்த ஆண்டுகளில் தனுஷ் க்கு இந்தப் படத்தின் மூலம் நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது.

மன்மதன் : 2004 ஆம் ஆண்டு ஏ ஜே முருகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிலம்பரசன்,ஜோதிகா,கவுண்டமணி,சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் சிம்பு இரட்டை வேடங்களில் நடித்து தனது கதாபாத்திரத்தை மிக அருமையாக நடித்துக் காட்டி இருப்பார். இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று 150 நாட்களுக்கு மேல் ஓடி பாக்ஸ் ஆப்பில் பிளாக்பஸ்டராக வெற்றி பெற்றது.

Also read: சூர்யாவை பாலோ செய்த நடிகர் தனுஷ்.. சொந்த காசில் சூனியம் வைத்து கொண்ட சம்பவம்

Trending News