புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வாயை விட்டு மாட்டிக் கொண்ட எஸ் ஜே சூர்யா.. ட்விட்டரில் மன்னிப்பு கேட்டு கதறி வரும் சம்பவம்!

பொதுவாக பிரபலங்கள் அளிக்கும் பேட்டி சூடு பிடிக்கும் விதத்தில் ஏடாகூடமான கேள்விகள் கேட்டு சிக்க வைப்பார்கள். அந்த வகையில் ஆனந்தவிகடன் சமீபத்தில் எஸ் எஸ் சூர்யாவை பேட்டி எடுத்துள்ளனர். நன்றாகத்தான் சென்று கொண்டிருக்கையில் அவரின் வாயை புடுங்கும் விதமாக எஸ் ஜே சூர்யாவிடம் ஒரு கேள்வியை கேட்டுள்ளது ஆனந்தவிகடன்.

அதில் எஸ் ஜே சூர்யா நீங்கள் எந்த ஹீரோவை மிகவும் விரும்புகிறீர்கள் என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் எனக்கு விஜய்யை ரொம்ப பிடிக்கும் என்று எதார்த்தமாக ஒரு பதிலை சொல்லி எஸ்கேப் ஆகலாம் என்று பார்த்தார்.

ஆனால் விடாப்பிடியாய் அவரை வம்புக்கு இழுத்து விஜய் சாருக்கு அப்புறம் எந்த ஹீரோவை குடும்பங்கள் கொண்டாடுகின்றனர் என்று ஒரு கேள்வியை முன் வைத்தனர். இந்த கேள்விக்கும் உஷாராக பதில் சொல்ல தவறிய எஸ் ஜே சூர்யா உளறிக்கொட்டி விட்டார்.

ஏனென்றால் அதற்கும் அவர் எதார்த்தமாக விஜய் சாருக்கு அப்புறம் சிவகார்த்திகேயனை குடும்பங்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர் என்று ஒரு பதிலை கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

இவர் கூறியதை கேட்டு ஆனந்தவிகடன் விஜய்க்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் என்று ஒரு பெரிய டைட்டிலை வைத்து ஒரு பக்கத்தை ரிலீஸ் பண்ணியது. ஐயையோ நான் அப்படி சொல்லவே இல்லை என்று இப்பொழுது எஸ் ஜே சூர்யா ட்விட்டர் பக்கத்தில் கதறி வருகிறார்.

அதாவது சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் பெண்களையும் குழந்தைகளையும் கவரும் விதத்தில் இருப்பதால் எஸ் ஜே சூர்யா அப்படி ஒரு பதிலை சொல்லி இருக்கலாம். ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் தல ரசிகர்கள் தாண்டவம் ஆடுகின்றனர்.

Trending News