வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சிவகார்த்திகேயன் தயாரித்து லாபமடைந்த 4 படங்கள்.. மூழ்கிய கப்பலை கரைக்கு கொண்டு வந்த பிளாக்பஸ்டர்

SK Produced Films: சிவகார்த்திகேயன் தெரிந்தவர், தெரியாதவர், நண்பர் என எல்லாருக்கும் கையெழுத்து போட்டு பெரும் கடனில் மாட்டிக் கொண்டார். 2 படங்களை மொத்தமாய் நம்பி, அதுல பாதாளத்தில் விழுந்துவிட்டார். வரிசையாக தொடர் தோல்விகள், நாலா பக்கமும் கடன் என மீள முடியாத அளவுக்கு 50 கோடிக்கு மேல் கடன் கொடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்.

மிஸ்டர் லோக்கல், ரெமோ போன்று இவர் நடித்த படங்கள் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இவருக்கு பேசப்பட்ட சம்பளத்தில் கூட நிறைய பாக்கி வைத்து விட்டனர். இப்படி மொத்தமாய் கடனாளி ஆகிய சிவகார்த்திகேயனை தூக்கி விட்ட 4 படங்கள். எஸ் கே தயாரிப்பில் இறங்கி லாபம் சம்பாதித்த படங்கள்.

மூழ்கிய கப்பலை கரைக்கு கொண்டு வந்த படங்கள்

கானா: 2018ல் சிவகார்த்திகேயன் முதல் முதலாக தயாரித்த படம் கனா. இந்த படம் வெறும் ஆறு கோடியில் எடுக்கப்பட்டது. ஆனால் தயாரித்த சிவாவிற்கு 12 கோடிகள் வரை லாபம் பார்த்து கொடுத்தது. பெண்களின் கிரிக்கெட் ஆசையை தத்ரூபமாக இந்த கதையில் கூறி இருப்பார் இயக்குனர்.

டாக்டர்: கடலில் மூழ்கிய சிவகார்த்திகேயன் கப்பலை இந்த படம் தான் இழுத்துத் தரைக்கு கொண்டு வந்தது என்று சொல்லலாம். 40 கோடிகள் செலவு செய்து கிட்டத்தட்ட நூறு கோடிகள் வரை சம்பாதித்த படம் தான் டாக்டர். சிவகார்த்திகேயன் பாதி கடனை அடைக்க டாக்டர் பட வெற்றி உதவி செய்தது. சைலன்ட் கில்லர் ஆக டார்க் காமெடியில் பட்டையை கிளப்பிய இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு பல பாராட்டுகளை பெற்று தந்தது.

டான்: சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த படம் டான். இதுவும் 100 கோடி வரை சம்பாதித்துக் கொடுத்தது. காமெடி, செண்டிமெண்ட் என கமர்சியல் ஹிட் அடித்த இந்த படம் இப்பவும் டிவியில் பார்க்கும்போது குடும்பங்கள் கொண்டாடுகின்றனர்.

குரங்கு பெடல்: தற்சமயம் சிவகார்த்திகேயன் குரங்கு பெடல் என்னும் படத்தை வாங்கி விநியோகம் செய்துள்ளார். இந்த படமும் இதுவரை அவருக்கு ஓரளவு லாபகரமாகவே அமைந்து வருகிறது. இதைத் தாண்டி பல விருதுகளை குவித்து உள்ளது, ஒத்த சைக்கிளை வைத்து படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகர்களையும் ஊக்குவிக்கும் விதமாக கதை களம் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது.

விஜய் இடத்திற்கு சிவகார்த்திகேயனை ஒப்பிடுவது சாத்தியமா.?

Trending News