ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அட்ஜஸ்ட்மென்ட்-க்கு மறுத்ததால் 5 வருடமா மார்க்கெட்டை இழந்த SK பட நடிகை.. புதுசா ரீ என்ட்ரி கை கொடுக்குமா?

Sivakarthikeyan Movie Actress: சினிமாவில் ஹீரோயின் ஆக அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெறுவது அவ்வளவு சுலபமல்ல. இதில் ஏகப்பட்ட பாலிடிக்ஸ் இருக்கிறது. அதிலும் ஒரு நடிகை யாரையுமே அட்ஜஸ்ட்மென்ட் செய்யாமல் ஹோம்லி லுக்கில் குடும்ப குத்து விளக்காகவே நிறைய படங்களில் அடுத்தடுத்து நடித்துக் கொண்டிருந்தார்.

சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இளசுகளை கவர்ந்தவர் தான் ஸ்ரீ திவ்யா. அதன் தொடர்ச்சியாக ஜீவா, காக்கிச்சட்டை, ஈட்டி போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்துக் கொண்டிருந்தார். அதன் பின் இவருக்கு திடீரென்று பட வாய்ப்புகள் இல்லாமலே போனது.

இவர் கடைசியாக தமிழில் 2017 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்த சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.  அதன் பின் ஐந்து வருடங்களாக சினிமா பக்கம் தலை காட்டாத ஸ்ரீதிவ்யா இப்போது ஒரு படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு பெற்று இருக்கிறார்.

Also read: கடைசியில் சிவகார்த்திகேயனுக்கு இந்த நிலைமையா?. கெட்ட நேரத்தால் அடி மேல் அடி வாங்கும் பரிதாபம்

ஆரம்பத்தில் ஸ்ரீதிவ்யா ஹோம்லி லுக்கில் நடித்து வெற்றி பெற்று, நிறைய படங்களில் நடித்து வந்தார். ஆனால் ஐந்து வருடம் காணாமல் போய்விட்டார். இதற்கான காரணம் தான் இப்போது பலரையும் உலுக்கி இருக்கிறது. ஒரு வாரிசு நடிகர் ஸ்ரீதிவ்யாவை தன்னுடைய படத்தில் நடிக்க வேண்டும் என்றால் தன்னை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருக்கிறார்.

ஸ்ரீதிவ்யா இதுவரை நடித்த படங்களின் வாய்ப்புகளை தன்னுடைய நடிப்பு திறமையால் தான் பெற்றிருக்கிறார். யாரையுமே அட்ஜஸ்ட்மென்ட் பண்ண மாட்டார். இதனால் அந்த வாரிசு நடிகர் கோபத்தில் இவரை பற்றி தப்பு தப்பாக சொல்லி மார்க்கெட்டை காலி செய்துவிட்டார். அதன்பிறகு ஸ்ரீதிவ்யாவிற்கு சுத்தமாகவே பட வாய்ப்பு கிடைக்காமல் போனது.

பொதுவாக எந்த ஹீரோயினாக இருந்தாலும் ஐந்து வருடம் நடிக்கவில்லை என்றால் மீண்டும் கதாநாயகியாக நடிக்க முடியாது. ஆனால் ஸ்ரீதிவ்யா உண்மையாக இருந்ததால் தற்போது மீண்டும் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘ரைட்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வருகிற 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது. செகண்ட் இன்னிங்ஸை துவங்கி இருக்கும் ஸ்ரீதிவ்யாவிற்கு, ரைட் படம் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also read: வெளியில் தலை காட்ட முடியாமல் தவித்த சிவகார்த்திகேயன்.. ஒரே வார்த்தையில் இமான் வைத்த முற்றுப்புள்ளி

Trending News