புதன்கிழமை, ஜனவரி 15, 2025

4 ஹீரோக்கள் எடுத்த முடிவால் நம்பர்-1 ஹீரோவாக வரப்போகும் SK.. ஜாக்பாட்னா இப்படி அடிக்கணும்

Actor Sivakarthikeyan: அண்ணன் எப்ப நகர்வான், திண்ணை எப்போ காலியாகும் என்று ஒரு பழமொழி சொல்வார்களே, அதுபோல்தான் சிவகார்த்திகேயனுக்கு தற்போது ஒரு ஜாக்பாட் அடித்திருக்கிறது. அதாவது குறுகிய காலத்துக்குள் தன்னுடைய திறமையால் வளர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் அளவிற்கு நம்ம வீட்டுப் பிள்ளையாக ஜொலித்து வருகிறார்.

இவர் நடிப்பில் வந்த படங்கள் மக்களிடம் ரீச் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுவிடும் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதனாலயே இவருடைய படங்கள் வசூல் அளவில் பெரிய நஷ்டம் அடைந்ததில்லை. இருந்தாலும் இவரால் முன்னணி ஹீரோ லிஸ்டில் டாப் 5 வில் வர முடியவில்லை. அதற்குக் காரணம் இவர்களுக்கு இருக்கும் ரசிகர்களின் பேராதரவு.

ஆனால் தற்போது அந்த ஹீரோக்கள் எடுத்த முடிவால் சிவகார்த்திகேயன் நம்பர் ஒன் ஹீரோவாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதாவது விஜய் ஆட்ட நாயகனாக ஜொலித்து வரும் இந்த சமயத்தில் அரசியலிலும் முழு கவனத்தை செலுத்தப் போகிறார். அத்துடன் இனி படங்களில் நடிப்பதை குறைத்து விட்டு எலக்சன் வரும் வேலையில் முழு முக்கியத்துவத்தையும் அரசியலில் செலுத்த போவதாக கூறியிருக்கிறார்.

Also read: அஜித் வேண்டாம், சிவகார்த்திகேயனுக்கு கிரீன் சிக்னல் போட்ட தயாரிப்பாளர்.. சம்பளத்தை பற்றி மூச்சு விடாத SK

அதே மாதிரி அஜித்தும் இரண்டு வருஷத்துக்கு ஒரு படம் என்கிற கணக்கு வைத்து படத்தில் நடித்து வருகிறார். மீதமுள்ள நாட்களில் அவருக்கு பிடித்த பைக் வேர்ல்ட் டூர் விஷயத்தில் ஆர்வம் காட்டுகிறார். அதே மாதிரி சூர்யா தற்போது தமிழ் படங்களில் கமிட் ஆகி இருக்கும் படத்தை மட்டும் நடித்து முடித்துவிட்டு அதன் பிறகு பாலிவுட் படங்களில் நடிப்பதற்கு களமிறங்கி இருக்கிறார்.

அதற்கு பிள்ளையார் சுழி போடும் விதமாக மும்பையிலேயே வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார். அத்துடன் தனுஷும் தற்போது நடித்து நடித்து போரடித்து விட்டது. அதனால் இரண்டாவது முறையாக அவருடைய ஐம்பதாவது படத்தை இயக்கி நடிப்பதில் இறங்கி விட்டார். அந்த வகையில் இந்த ட்ரிக்ஸ் அவருக்கு கை கொடுத்து விட்டால் இதையே கொஞ்சம் பாலோ பண்ணலாம் என்ற நினைப்பில் சுற்றி வருகிறார்.

இப்படி இந்த நான்கு நடிகர்களும் நடிப்பை கொஞ்சம் விட்டு விலகுவதால் ஈசியாக அந்த கேப்பில் உள்ளே புகுந்து விடலாம் என்ற எண்ணத்தில் சிவகார்த்திகேயன் இருக்கிறார். அந்த வகையில் இனி இவருடைய காட்டுல அடை மழை தான் என்பதற்கு ஏற்ப நம்பர் ஒன் ஹீரோவாக வந்துவிடுவார். ஜாக்பாட் என்றால் இப்படித்தான் அடிக்கணும் என்பதற்கு ஏற்ப சுக்கிர திசையை கையில வச்சுட்டு அலைகிறார்.

Also read: சிவகார்த்திகேயனால் லலித்துக்கு வந்த ஆப்பு.. அடம்பிடித்து கறாராய் தனுஷ் செய்யும் அக்கப்போரு!

Trending News