புதன்கிழமை, ஜனவரி 15, 2025

SK23 மூணு பேர் மறுத்து கடைசியில் வந்த விஜய் வில்லன்.. சிவாவை விட ஸ்கோர் பண்ணிருவாருன்னு பயந்த முருகதாஸ்

SK23 is the last Vijay villain after three people refused: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக சிவகார்த்திகேயன் தனது வெற்றி படங்களின் மூலம் தமிழ்  ரசிகர்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம் பிடித்துள்ளார். 

கடந்த ஆண்டு வெளியான அயலான் படத்தின் மூலம் குருவை மிஞ்சும் சிஷ்யனாக தனுஷுக்கு நிகராக கலெக்ஷனிலும் ஒருவாறு கல்லாகட்டி தனது தடத்தை பதித்துள்ளார்.

காமெடியில் கலக்கி, குடும்பங்கள் கொண்டாடும் ஹீரோவாக உயர்ந்தவர் தற்போது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் ஆக்சனிலும் தெறிக்க விட்டு வருகிறார் சிவா. 

அடுத்ததாக தமிழ் சினிமாவுக்கு பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் உடன் SK23 படத்திற்காக கூட்டணி சேர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.  இப்படத்தில் வில்லனாக நடிக்க மூணு பேரை அணுகி உள்ளனர் அவர்கள்,

அருண் விஜய்:  என்னை அறிந்தால் படத்தில் நாயகனை மிஞ்சிய வில்லனாக அருண் விஜய்யின் கதாபாத்திரம் அமைந்தது.  நெகட்டிவ் ரோலில் தெறிக்க விட்டார் அருண் விஜய்.  

முன்னணி நடிகராக தற்போது பல படங்களில் நடித்து வரும் அருண் விஜய், இதில் வில்லன் கதாபாத்திரம் என்றதும் உடனடியாக மறுத்துவிட்டாராம்.

அது மட்டும் இன்றி  இலை மறை காயாக சிவகார்த்திகேயன் மற்றும் அருண் விஜய்க்கு பல பிரச்சனைகள் உள்ளது என்பது தகவல். 

மோகன்: 80’s காலகட்டத்தில் தமிழ் சினிமாவை கலக்கிய முன்னணி நடிகர் மோகன் தற்போது விஜய்யின் கோட் திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். 

கோட் படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும் மோகனை இதிலும் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க வைக்க பேசப்பட்டது. பல்வேறு காரணங்களால் மோகன் இப்படத்தில் நடிப்பதை மறுத்துவிட்டார்.

சிவாவை விட வில்லன் ஸ்கோர் செய்து விடுவார் என்று பயந்த முருகதாஸ்

சிவராஜ்குமார்: கன்னட நடிகர் சிவராஜ் குமார் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்குள்ளும் நல்ல பாண்டிங்  உள்ளது. ஜெயிலர் மற்றும் கேப்டன் மில்லர் படத்தின் மூலம் சிவராஜ்குமார் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயம் ஆனவர் என்பதால்,

அவரை வில்லன் கேரக்டருக்கு நடிக்க வைக்கலாம் என ஆலோசிக்கப்பட்டது.  இருந்த போதும் சிவராஜ் குமார் இதில் வில்லன் கதாபாத்திரம் ஏற்கும் போது சிவாவை விட சிவராஜ்குமார் ஸ்கோர் செய்து விடுவாரோ என்று பயந்து வேண்டாம் என்று மறுத்து விட்டாராம் முருகதாஸ்.

இறுதியாக துப்பாக்கி படத்தில் ஸ்மார்ட் வில்லனாக வந்து ரசிகர்களை மிரளவைத்த வில்லன் நடிகர் வித்யூத் ஜம்வால் வில்லனாக நடிக்க பேச வைக்கப்பட்டது.

தற்போது தமிழ் சினிமாக்களில் தலை காட்டாத இந்த அழகிய அசுரன், இயக்குனர் முருகதாஸுக்காக இப்படத்தை ஒப்புக் கொள்வதாக கூறினாராம்.

Trending News