வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சோசியல் மீடியாவில் வழுக்கும் எதிர்ப்பு.. பிக் பாஸ் எலிமினேஷனை குறித்து கொந்தளித்த ஆர்மி

இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது காரசாரமாக சென்று கொண்டிருக்கிறது. அதிலும் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த எலிமினேஷனை இப்போதும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் சோசியல் மீடியாவில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேற உள்ள நிலையில், இந்த வாரம் மணிகண்டன் எலிமினேட் ஆகப்போகிறார். இவருக்கு முன்பு கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கன்டென்ட் கொடுக்கும் கண்டஸ்டண்ட் ஆக வனிதாவிற்கு பிறகு கருதப்பட்ட தனலட்சுமி எலிமினேட் செய்யப்பட்டார்.

Also Read: கட்சி மாறிய வாரிசு.. நீண்ட நாட்களுக்குப் பிறகு சூடு பிடிக்கும் பாரதிகண்ணம்மா

அவருடைய எலிமினேஷன் அவரை மட்டுமல்ல நிகழ்ச்சியை பார்ப்போரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. ஏனென்றால் போட்டியாளர்களுடன் வாக்குவாதம் செய்வது மட்டுமின்றி, சீசன் 6 நிகழ்ச்சியின் ஸ்ட்ராங்கான கண்டஸ்டன்ட் என டைட்டில் வின்னர் ஆவதற்கு அதிக வாய்ப்பு இருந்த தனலட்சுமி வெளியேறியது பலரையும் கலங்க வைத்தது.

தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சிவின், கமலஹாசன் முன்னிலையில் தனலட்சுமிக்கு பதில் மணிகண்டன் வெளியேறி இருக்கலாம் என்று வெளிப்படையாக பேசினார். அத்துடன் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தந்திருந்த போட்டியாளர்களின் உறவினர்கள் பலரும் குறிப்பாக மணிகண்டனின் தங்கை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூட தனலட்சுமி வெளியேறியது ஷாக்கான செய்தி என வெளிப்படையாக கருத்து தெரிவித்தார்.

Also Read: பத்திரிகையாளர்கள் கேட்ட ஒரே கேள்வி.. கதறி கதறி ஒப்பாரி வைத்த தர்ஷா குப்தா

மேலும் வத்திக்குச்சி வனிதாவும், ‘தனலட்சுமி வெளியேறியது கொஞ்சம் கூட நியாயம் இல்லை. இதை கமலஹாசனும் ஒத்துக் கொண்டிருக்கிறார்’ என்று வீடியோ பதிவை வெளியிட்டார். அத்துடன் சமூக வலைதளங்களில் ‘எங்க ராணி எங்கடா’ என்று தனலட்சுமியின் ரசிகர்கள் அவருடைய புகைப்படங்களை பதிவிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.

இதனால் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி டிஆர்பி-யில் பயங்கர அடிவாங்கி கொண்டிருக்கிறது. ஆகையால் விரைவில் தனலட்சுமியை வைல்ட் கார்டு போட்டியாளராக இன்னும் சில தினங்களில் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்ப வாய்ப்பு இருக்கிறது.

Also Read: டிஆர்பி-யில் டாப் 6 இடங்களை ஆக்கிரமித்த ஒரே சேனல்.. புத்தம் புது சீரியல்களால் பின்னுக்குத் தள்ளப்பட்ட பிரபல சீரியல்கள்

Trending News