சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

நடிகையின் கன்னத்தில் பாம்பை நக்க விட்ட கமல்.. உடம்பெல்லாம் உறைஞ்சு போன சம்பவம்

நடிகர் கமல்ஹாசன், நடிகை சிவரஞ்சனி உள்ளிட்ட பலரது நடிப்பில், இயக்குநர் ஜி பி விஜய் இயக்கத்தில், கடந்த 1993ம் ஆண்டு வெளியான திரைப்படம் கலைஞன். இந்தப்படத்தில் இடம் பெற்ற ‘கொக்கரக்கோ’பாடலில் கமல்ஹாசனும், சிவரஞ்சினியும் இணைந்து பாம்புடன் நடனம் ஆடியிருப்பார்கள். அந்த அனுபவம் பற்றி சமீபத்தில் நடிகை சிவரஞ்சனி பகிர்ந்திருந்தார். அவர் சொன்ன விஷயம், இப்போ பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆண்டவர் பல லீலைகள் செய்தவர் என்று தெரியும், ஆனால் இந்த வேலையெல்லாம் பார்த்திருக்காரா என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். “அந்தப் பாடலின் பொழுது நான் மேக்கப் ரூமில் இருந்தேன். அப்போது உள்ளே வந்த மேக்கப் மேன், ரெடியா மேடம் என்றார். கூடவே, படப்பிடிப்பிற்கு பாம்பு வந்திருக்கிறது என்று கூறினார். உடனே என்ன பாம்பா..? என்று பயந்த நான், ரூமை உள்ளிருந்து பூட்டிக் கொண்டு வெளியே வரவில்லை. “

“ஆனால், கமலஹாசன் துணிச்சல் மிக்கவர். அவர் தான் எனக்கு பாம்பை பழக்கினார். முதலில் அவர், எங்கே ஹீரோயின் காணவில்லையே என்று கேட்டார். அப்போது நான் பயத்தில் வர மாட்டேன் என்று அடம் பிடிக்கிறேன் என்று மேக் அப் மேன் சொல்ல, கமலஹாசன் வந்து என்னை சமாதான படுத்தினார்.”

“பாம்பு மிகவும் பாவம். நாம் ஏதாவது செய்தால் தான் அது உஷ்.. உஷ்..என்று ஏதாவது செய்யும் என்று பேசி, பேசி பாம்பு குறித்தான பயத்தை போக்கினார். கிட்டத்தட்ட எனக்கு அவர் 5 நிமிடங்கள் கவுன்சிலிங் கொடுத்தார். அப்படி பேசி பேசி தான் அந்தப் பாம்புடன் என்னை நடிக்க வைத்தார். ஒரு கட்டத்தில் நானும் நடிக்க ஒத்துக்கொண்டேன்.”

“அந்தப்பாடலில் அந்தப்பாம்பை என் தோளில் போடுவார்கள். அது என் உடம்பில் நெழிந்து, கன்னத்தில் வந்து நாக்கால் நக்கும். அப்பொழுது என் உடம்பெல்லாம் ஆடிப் போய்விட்டது. ஆனால் அந்த பாடலுக்கு பின்னர் எனக்கு பாம்பு குறித்தான பயமே போய்விட்டது. அதன் பின்னர் தெலுங்கு படம் ஒன்றில் நான் பாம்பு கதாபாத்திரமாகவே நடித்தேன்.”

“அந்தப் படத்தில் பாம்பை எடுத்து என்னுடைய மடியில் வைத்துக் கொண்டேன். நான் ஷூட்டிங் போனாலே அது எனக்கு ஒரு செல்லப் பிள்ளையாக மாறிவிட்டது. அதை நான் கொஞ்சிக் கொண்டிருந்தேன். எல்லாமே கமல் சார் எனக்கு பழக்கிவிட்டதுதான்.”என்று அவர் கூறினார். இவர் கூறிய இந்த விஷயம் நெட்டிசன்களை ஆச்சரிய பட வைத்துள்ளது.

Trending News