ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

கடனில் இருந்தாலும் கடவுள் போல் காப்பாற்றும் சிவகார்த்திகேயன்.. பிரின்ஸ் பட தோல்விக்கு இத்தனை கோடி உதவியா.?

சிவகார்த்திகேயனுக்கு கடந்த சில வருடங்களாகவே சொல்ல முடியாத அளவுக்கு கடன் பிரச்சினை இருக்கிறது. டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் நல்ல வசூலை பெற்று வெற்றி பெற்றாலும் அவர் இன்னும் அந்த கடனிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார். தற்போது பட்ட காலிலேயே படும் என்பது போல் அவருக்கு மீண்டும் ஒரு பிரச்சனை வந்து சேர்ந்திருக்கிறது.

இப்போதுதான் அவர் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய கடன்களை எல்லாம் அடைத்து கொஞ்சம் மூச்சு விட ஆரம்பித்தார். அதற்குள் அடுத்த பிரச்சனை கால் டாக்ஸியை பிடித்து வந்திருக்கிறது. அதாவது அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருடன் கூட்டணி அமைத்திருந்த சிவகார்த்திகேயனுக்கு இது கடும் அதிர்ச்சியை கொடுத்தது.

Also read: செஞ்ச தப்புக்கு பரிகாரம் செய்யும் சிவகார்த்திகேயன்.. நடிப்பை தாண்டி ரஜினியை ஃபாலோ செய்யும் மாஸ்டர் மைண்ட்

அது மட்டுமல்லாமல் தயாரிப்பாளரும் இதனால் கடன் நெருக்கடிக்கு ஆளானார். இதனைப் பார்த்த சிவகார்த்திகேயன் தற்போது அந்த கடனுக்கு ஜவாப்தாரியாக மாறி இருக்கிறார். அந்த வகையில் அவர் பிரின்ஸ் பட நஷ்டத்திற்காக ஆறு கோடிகளை கொடுத்து உதவி இருக்கிறார். இந்த விஷயம் தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த பணத்தை அவர் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு சரி பாதியாக பிரித்துக் கொடுத்திருக்கிறார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். ஏனென்றால் சிவகார்த்திகேயன் தன்னுடைய கடன் பிரச்சினையால் எந்த அளவுக்கு கஷ்டங்களை சந்தித்தார் என்பது பலருக்கும் தெரியும்.

Also read: அடுத்த வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் 5 படங்கள்.. பல வருடங்களாக காத்து கிடக்கும் அயலான்

அது மட்டுமல்லாமல் இவருடைய ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும் சமயத்தில் இந்த கடனுக்காக அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார் அதற்காகவே அவர் நேரம் காலம் பார்க்காமல் தன் குடும்பம், குழந்தைகளை கூட கவனிக்காமல் கடுமையாக உழைக்க ஆரம்பித்தார். மேலும் பிரின்ஸ் படத்தையும் அவர் மிகவும் எதிர்பார்த்தார்.

ஆனால் படத்திற்கு வந்த விமர்சனங்கள் படத்தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. இருந்தாலும் தன்னை நம்பியவர்கள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக அவர் இவ்வளவு பெரிய தொகையை கொடுத்திருக்கிறார். அந்த வகையில் ரசிகர்கள் முன்னணி ஹீரோக்களே செய்யத் துணியாத இந்த செயலை செய்த சிவகார்த்திகேயனின் மனசு கடவுள் போன்றது என பாராட்டி வருகின்றனர்.

Also read: கமலை டீலில் விட்ட சிவகார்த்திகேயன்.. இதுவர வாங்குன அடி பத்தாவது போல!

Trending News