செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கனத்த இதயத்தோட வந்த சிம்பு.. பவதாரணி மரணத்துக்கு இரங்கல் கூட தெரிவிக்காத அரக்க மனம் படைத்த ஹீரோக்கள்

Some Heroes who don’t even condole the death of Bhavadharani: இளையராஜாவின் மகளும் யுவன்சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜாவின் சகோதரிமான பவதாரணி அவர்கள் கடந்த வியாழன் அன்று இயற்கை எய்தினார். சமீப காலமாக புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருந்த பவதாரணி, ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இலங்கையை சென்று சிகிச்சை தொடங்குவதற்கு முன்பாகவே மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திரையுலகினர் பலரும் வந்து அஞ்சலி செலுத்தி நிலையில் பவதாரணியின் இறுதி சடங்கு பண்ணைபுரத்தில் உள்ள அவரது சொந்த வீட்டில் நடைபெற்றது.  பவதாரணி இறுதிச் சடங்கில் அவர் தேசிய விருது வாங்க காரணமான பாரதி படத்தில் இடம் பெற்ற “மயில் போல பொண்ணு ஒன்னு” பாடலை குடும்பத்தினர் அனைவரும் பாடி பிரியா விடை பெற்றனர். இது காண்போர் அனைவரின் கண்களையும் கலங்க வைத்தது.

உண்மையிலேயே “மயில் போல பொண்ணு ஒன்னு குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு  நின்னா மனசு போன இடம் தெரியல“ என்ற பாடலின் ஒவ்வொரு வார்த்தையின் உருவகமாக நின்று அனைவரின் மனசையும் கனக்க செய்திருந்தார் பவதாரணி. இறுதிச் சடங்கில் திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் வருத்தம் தெரிவித்து இருந்தனர்.

Also read: கடைசி நேரத்தில் பவதாரணி சந்தித்த சோதனைகள்.. பாசத்தால் பதறிப் போன இளையராஜா

சிம்பு, பாரதிராஜா, பிரேமலதா விஜயகாந்த் என திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் வந்து இரங்கல் தெரிவித்து சென்றனர்.  யுவன் சங்கர் ராஜாவின் தோழன் என்ற முறையில் முதல் ஆளாக வந்து சிம்பு பவதாரணியின் உடலுக்கு மரியாதை செலுத்தி தனக்குரிய எக்ஸ் தளத்திலும் இரங்கற்பா பதிவிட்டு இருந்தார்.

ஆனால் சூர்யா, அஜித், விஜய் போன்ற முன்னணி பிரபலங்கள் பலர் இறுதி அஞ்சலிலும் கலந்து கொள்ளவில்லை.  இரங்கல் கூட தெரிவிக்காமல் கல் மனசாக இருந்து விட்டனர். தமிழகத்தில் இசைஞானிக்கு ஏற்பட்டிருக்கும் இந்த இழப்பை ஒரு பொருட்டாக கண்டுகொள்ளாமல் சூர்யா ஒரு படி மேலே சென்று கங்குவாவில் நடித்த வில்லன் பாபி தியோலுக்கு மட்டும் மறக்காமல் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார். பாலிவுட்டில் வெற்றி பெறுவது இருக்கட்டும்! தமிழ்நாட்டில் என்ன நடக்குதுன்னு கொஞ்சம் பாருங்க சார்.

இளவயதில் சிலரின் மரணம் யாவருக்கும் வேதனையான ஒன்றாக தவிர்க்க முடியாதது  ஆகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மிகப்பெரிய லெஜண்ட்,  தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை, அவரது சோகத்தில் பங்கு கொள்வது என்பது தமிழ் சினிமாவின் கடமை அல்லவா. இதை மனசாட்சி அற்ற முறையில் மறுப்பது ஏன்? என்ற கேள்வி பலரது மனதில் எழுப்பியுள்ளது.

Also read: அபசகுனங்களை முன்பே கணித்த இளையராஜா.. கார்த்திகை தீப திருநாளில் சூழ்ந்த இருள்

Trending News