புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கமலுக்கு சோனி கொடுத்த ஓவர் குடைச்சல்.. தூக்கி எறிஞ்சிட்டு ஆண்டவர் போட்ட டப்பாங்குத்து

சிவகார்த்திகேயன் அமரன் படம் முடிந்து விட்டது. போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் போய்க்கொண்டிருக்கிறது. இந்த படம் தீபாவளி அன்று வேட்டையன், கங்குவா படங்களுடன் களம் இறங்குகிறது. இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி நிறுவனம் இணைந்து தயாரித்தது.

படத்திற்கு மொத்தம் 120 கோடிகள் செலவழிந்து உள்ளது. இந்த படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு. சிவகார்த்திகேயன் அவரின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் முழுக்க முழுக்க காஷ்மீரில் ஷூட்டிங் எடுக்கப்பட்டது. அந்த கடுங்குளிரில் மொத்த யூனிட்டும் கஷ்டப்பட்டு உள்ளது.

இந்த படத்திற்கு பட்ஜெட்டாக சோனி நிறுவனம் வெறும் 24 கோடிகள் மட்டுமே கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி படப்பிடிப்பு தளத்திற்கே சென்று நிறைய கஞ்சத்தனங்கள் செய்துள்ளது. இதற்கு ஏன் இவ்வளவு செலவு, அதுக்கு ஏன் அவ்வளவு காசு கொடுக்கிறீர்கள் என்றெல்லாம் பேரம் பேசி எரிச்சலை கிளப்பியுள்ளது.

தூக்கி எறிஞ்சிட்டு ஆண்டவர் போட்ட டப்பாங்குத்து

சிவகார்த்திகேயனுக்கு ஏன் இவ்வளவு காஸ்ட்லி ரூம். ஹீரோயின் சாய் பல்லவிக்கு ஏன் இவ்வளவு சம்பளம் என்றெல்லாம் நபித்தனம் செய்துள்ளது. ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமையை இழந்த கமல், சோனி கொடுத்த 24 கோடியையும் மற்றும் லாபம் 12 கோடிகள் என சேர்த்து 36 கோடிகளை சோனியிடம் வீசி எரிந்துள்ளார்.

இப்பொழுது கமல்தான் இதை தனியாக ரிலீஸ் செய்யப் போகிறார். படத்திற்கு மொத்தம் 120 கோடிகள் செலவழித்ததை கமலே பொறுப்பேற்றுள்ளார். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தீபாவளி அன்று தியேட்டரில் விநியோகம் செய்கிறது. முற்றிலும் மாறுபட்ட ஆர்மி ஆபிஸராக நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

Trending News