Big Profit: வாங்க பங்காளி, போங்க பங்காளி என சிவகார்த்திகேயனும், சூரியும் மாறி மாறி பேசிக்கொள்வார்கள். இப்பொழுதுதான் இவர்கள் அப்படி கூப்பிடுவதற்கான உண்மையான அர்த்தம் வெளிவந்துள்ளது. சினிமாவையும் தாண்டி இவர்களுக்குள் நெருங்கிய நட்பு இருந்து வருகிறது.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பது மட்டுமல்லாமல் பிசினஸிலும், இன்வெஸ்ட்மெண்ட் செய்து வருகிறார். அப்படி எஸ் கே. யூ ட்யூபில் இன்வெஸ்ட்மென்ட் செய்த கம்பெனிதான் “பிளாக் ஷீப்”. இதன் ஓனர் விக்னேஷ்காந்த் என்றுதான் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிவகார்த்திகேயன் இதில் ஒரு சைலன்ட் பார்ட்னர்.
பிளாக் ஷீப், யூ டியூப் சேனல் ஆரம்பிக்கும் போது சிவகார்த்திகேயன் தான் ஒரு கோடி கொடுத்துள்ளார். இப்படி அதிலும் பங்குதாரராக இருந்துள்ளார் எஸ் கே. இப்பொழுது அந்த சேனல் அசுர வளர்ச்சி அடைந்து, அதன் பங்குகளை சமீபத்தில் சிவகார்த்திகேயன் 50 கோடி ரூபாய்க்கு விற்று பணம் பார்த்திருக்கிறார்.
பங்காளி சூரியுடன் கொடிகட்டி பறக்கும் எஸ் கே
அதுபோக மதுரையில் சூரி நடத்தி வரும் அம்மன் ஹோட்டலிலும் சிவகார்த்திகேயன் ஒரு பார்ட்னராம். இருவரும் சேர்ந்து கோடிக்கணக்கில் அதில் இன்வெஸ்ட்மெண்ட் செய்துள்ளனர். இவர்கள் அடிக்கடி வா பங்காளி. போ பங்காளி என்று கூறிக் கொள்வதின் அர்த்தம் இதுதான் போல்.
ஐயய்ன் மற்றும் அம்மன் என்று நடிகர் சூரிக்கு மதுரையில் ஹோட்டல்கள் இருக்கிறது இதன் இரண்டு மூன்று கிளைகள் மதுரையை சுற்றியுள்ள ஊர்களில் அமைத்துள்ளார். இந்த ஹோட்டல்களிலும் சிவகார்த்திகேயன் பார்ட்னராம். இந்த ரெஸ்டாரன்களில் இருந்தும் இருவருக்கும் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது
- சிவகார்த்திகேயன் இடத்தை கைப்பற்றிய சூரி
- கவர்ச்சி குயினை கேட்டு அடம்பிடிக்கும் சிவகார்த்திகேயன்
- மீண்டும் கடனில் தத்தளிக்க போகும் சிவகார்த்திகேயன்