திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய், அஜித்துக்கு இணையாக சாதனை படைத்த சூரி.. காணாமல் போன சிம்பு!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய் மற்றும் அஜித் போன்ற நடிகர்களின் படங்கள் ரசிகர்களால் அதிகமாக கொண்டாடப்படுவதும், அதிக நாட்கள் தியேட்டரில் ஓடுவதும் எப்போதும் நடக்கும் விஷயம் தான். ஆனால் ஒரு நல்ல கதை எடுத்து, அதில் சின்ன ஹீரோ நடித்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் அந்தப் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வைக்கிறார்கள்.

இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் சின்ன ஹீரோ, பெரிய ஹீரோ என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய்விட்டது. படம் நன்றாக இருந்தால் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். கதை நன்றாக இல்லாமல், அதில் முன்னணி ஹீரோக்கள் நடித்தாலும் அந்த படத்தின் மீதான நெகட்டிவ் விமர்சனங்களை வைப்பதற்கு ரசிகர்கள் எப்போதும் தயங்குவதில்லை.

Also Read:விஜய், அஜித்துக்கு இணையாக வசூலை அள்ளிய சூரி.. விடுதலை படத்தின் மொத்த கலெக்ஷன் இதுதான்

இப்படி சமீபத்தில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் தான் விடுதலை. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த விடுதலை திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. முதன் முதலில் கதாநாயகனாக சூரி நடிக்கிறார் என்ற தகவல் ரசிகர்களுக்கும், சினிமா பிரபலங்களுக்கும் வெற்றிமாறனின் மீது ஒரு மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது.

ஆனால் சூரி தனக்கு கிடைத்த வாய்ப்பையும், வெற்றிமாறன் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையையும் தன்னுடைய கடின உழைப்பின் மூலம் காப்பாற்றி இருக்கிறார். இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு நடிகர் சூரியின் நடிப்பை ரசிகர்கள் பயங்கரமாக புகழ்ந்து தள்ளினார்கள். மேலும் படமும் முழுக்க முழுக்க பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது.

Also Read:விடுதலையால் சூரிக்கு அடித்த ஜாக்பாட்.. குமரேசனின் புதிய காரின் விலை இத்தனை கோடியா!

விடுதலை திரைப்படம் தியேட்டரில் மட்டுமில்லாமல் ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படம் ஓடிடி தளத்தில் ரிலீசான பிறகும், தியேட்டரில் 50 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. தளபதி விஜய் நடிப்பில் வந்த வாரிசு மற்றும் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வந்த துணிவு திரைப்படங்கள் தான் இப்படி ஓடிடி ரிலீஸ் ஆன பிறகும் தியேட்டரில் 50 நாட்களைக் கடந்து ஓடின.

தற்போது இந்த சாதனையை நடிகர் சூரி நடித்த விடுதலை திரைப்படமும் செய்திருக்கிறது. விடுதலை திரைப்படத்துடன் தான் நடிகர் சிம்பு நடித்த பத்து தல திரைப்படமும் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு பயங்கர ஆரவாரமும், பில்டப்பும் கொடுக்கப்பட்டது. கடைசியில் படம் வந்த இடமும், போன இடமும் தெரியாமல் காணாமல் போனது.

Also Read:யாருமே அறியாத சூரியின் முதல் 5 படங்கள்.. உண்மையான உழைப்பால் உயர்ந்த முருகேசன்

Trending News