வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

சிவகார்த்திகேயன் இடத்தை கைப்பற்றிய சூரி.. கருடனுக்காக தலையை அடமான வைத்த சொக்கன்

Soori: சிவகார்த்திகேயன் நம்ம வீட்டுப் பிள்ளையாக ஒவ்வொரு குடும்பத்திலும் வளர்ந்து விட்டார். இன்று அவருக்கு 7 முதல் 70 வயது வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். சோலோவா பல விஷயங்களை சாதித்து இன்று சினிமாவில் ஆலமரம் போல் வளர்ந்து நிற்கிறார்.

சிவகார்த்திகேயன் இடத்தை இவர் பிடித்து விடுவார் என பல ஹீரோக்களை கூறுகின்றனர். குறிப்பாக கவின், குட் நைட் மணிகண்டன், பிரதீப் ரங்கநாதன் என அனைவரையும் சிவகார்த்திகேயன் போல் நடிக்கிறார்கள். இவர்கள் சிவகார்த்திகேயனை ஓவர் டேக் செய்து விடுவார்கள் என்றெல்லாம் பேசப்பட்டது.

ஆனால் இப்பொழுது ஒரு சூரி சிவகார்த்திகேயனை மிஞ்சி விட்டார். நடிப்பில் இல்லை வாங்கிய கடனில் சிவகார்த்திகேயனை ஓவர்டைக் செய்து வருகிறார் எஸ் கே நெருங்கிய நண்பரான சூரி. சிவகார்த்திகேயன் எப்பொழுதுமே அவர் படம் ரிலீஸ் ஆகும் போது கடன் பத்திரத்தில் கையெழுத்து போட்டு. பழைய பாக்கி பணத்துக்காக செக்யூரிட்டி கொடுப்பார்.

கருடனுக்காக தலையை அடமான வைத்த சொக்கன்

இப்பொழுது பரோட்டா சூரி சிவகார்த்திகேயனை மிஞ்சி விட்டார். சமீபத்தில் சூரி நாயகனாக நடித்த கருடன் படத்துக்காக பத்திரத்தில் கையெழுத்து போட்டு படத்தை ரிலீஸ் செய்ய உதவி செய்து இருக்கிறார். சூரி, சசிகுமார் சமுத்திரக்கனி போன்றவர்கள் நடிப்பில் கடந்த வாரம் வெளியானது கருடன் படம்

கருடன் படத்துக்காக 20 கோடிகள் மதுரை அன்புச் செழியன் இடம் கடனாக வாங்கி இருக்கிறார்கள். அது வட்டியோடு சேர்த்து 24 கோடியாகிவிட்டது. கடைசியில் ஒரு 7 கோடிகள் துண்டுவிழுந்துள்ளது. படத்தை ரிலீஸ் செய்வதற்கு தடை எனக் கூறப்பட்ட போது, சூரி கையெழுத்து போட்டு அந்த 7 கோடிக்காக தன் தலையை அடமான வைத்திருக்கிறார்

Trending News