Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

பாச போராட்டத்தில் சூரி.. மாமன் முழு விமர்சனம்

பாச போராட்டத்தில் சூரி.. மாமன் முழு விமர்சனம்

Maaman Movie Review : பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ராஜ்கிரன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இருக்கிறது மாமன். படத்தின் ஆன்லைன் ஸ்டோரி மாமனும், மருமகனும் எவ்வாறு இணைப்பியாமல் இருக்கிறார்கள் என்பதுதான். திருமணம் […]

Maaman Movie Review : பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ராஜ்கிரன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இருக்கிறது மாமன். படத்தின் ஆன்லைன் ஸ்டோரி மாமனும், மருமகனும் எவ்வாறு இணைப்பியாமல் இருக்கிறார்கள் என்பதுதான்.

திருமணம் ஆகி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பாபா பாஸ்கர் மற்றும் சுவாசிகா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. கருவில் இருக்கும் போதே தாய் மாமனான சூரி தனது மருமகன் மீது அதீத அன்பு வைக்கிறார்.

இந்த சூழலில் சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோருக்கு திருமணம் நடக்கிறது. சுட்டி பையனின் சுட்டித்தனத்தால் கணவனுடன் நெருக்கமாக இருக்க முடியாமல் ஐஸ்வர்யா லட்சுமி தவிக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வருகிறது.

சூரியின் மாமன் விமர்சனம்

அப்பாவை விட மாமன் மீது அதிகம் பாசம் வைத்துள்ளதால் மகன் மீது பாசத்தை காட்ட முடியவில்லை என பாபா பாஸ்கர் வேதனைப்படுகிறார். மேலும் ஒரு ஒரு கட்டத்திற்கு மேல் குடும்பம் இரண்டுபட்டு போகிறது. சூரி தனது மருமகனை பிரியும் நிலை ஏற்படுகிறது.

பிரிந்த உறவுகள் மீண்டும் சேர்ந்ததா என்பதுதான் மாமன் படத்தின் கதை. படத்திற்கு பிளஸ் என்றால் கதாபாத்திர தேர்வு தான். சூரி கணக்கச்சிதமாக நடித்து இருக்கிறார். அவரது மனைவி ஐஸ்வர்ய லட்சுமி கொடுத்த கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் கலக்கி இருக்கிறார்.

தன்னுடைய நடிப்பில் மற்றொரு முத்திரை பதித்திருக்கிறார் சுவாசிகா. சிறுவன் பிரகீத் சிவன் அற்புதமாக நடித்திருக்கிறார். விமல் திடீரென கேமியோ தோற்றத்தில் வந்து சிரிக்க வைக்கிறார். பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.

படத்திற்கு மைனஸ் என்றால் உணர்ச்சி பூர்வமான கதை என்பதால் ரசிகர்கள் சிரிக்கும்படியான காட்சிகள் அமையவில்லை. ஒரு சில காட்சிகள் சலிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. முதல் பாதி என்டர்டைன்மென்டாக இருந்த நிலையில் இரண்டாம் பாதியில் மொத்தமாக எமோஷனலாக இருந்தது.

குடும்பத்துடன் பார்க்க மாமன் ஒரு நல்ல படம் தான். ஆனால் கொஞ்சம் நகைச்சுவை கலந்து படத்தைக் கொண்டு சென்று இருந்தால் கண்டிப்பாக ஒர்க்அவுட் ஆகி இருக்கும்.

சினிமா பேட்டை ரேட்டிங் : 2.75/5

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.