வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

கட்டிப்பிடித்து எலும்பை உடைத்த சௌந்தர்யா.. மரண பீதியில் வெண்பா

விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் பத்து வருடங்களாக கணவன் மனைவியான பாரதி-கண்ணம்மா இருவரையும் பிரித்து சதி வேலை செய்த வெண்பாவின் ஆட்டத்தை சௌந்தர்யா அடக்க முடிவெடுத்திருக்கிறார். இதனால் வெண்பாவின் அம்மாவிடம் வெண்பா-ரோஹித் இருவருக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடத்த சொல்கிறார்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வெண்பாவை வெண்பாவின் அம்மா மற்றும் சௌந்தர்யா இருவரும் படு கேவலமாக நடத்துகின்றனர். இந்த நிச்சயதார்த்தத்திற்கு மட்டும் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் மறுபடியும் சிறைக்கு சென்று களி தின்ன வைத்துவிடுவேன் என வெண்பாவின் அம்மா திட்டுகிறார்.

மறுபுறம் சௌந்தர்யா வெண்பாவை கட்டிப்பிடித்து அன்போடு சொல்வதுபோல் உருட்டி மிரட்டுகிறார். ‘கண்ணம்மாவை பிரசவத்தின்போது கொல்ல திட்டமிட்டது, இன்னும் அவர் செய்த சதி வேலைகளை போலீசில் புகார் அளித்து ஜெயிலில் தள்ளி விடுவேன்.

ஒழுங்கு மரியாதையாக நிச்சயதார்த்தத்தில் அமைதியாக நடந்து கொள்’ என முதுகிலேயே சௌந்தர்யா வெண்பாவை குத்துகிறார். அந்த சமயம் எதுவும் பேசாமல் இருக்கும் வெண்பா தன்னுடைய கோபத்தை முகத்தில் கொடூரமாக காட்டினார்.

இதன்பிறகு நிச்சயதார்த்தத்தில் அடாவடி செய்ய முடியாது என்பதால், ‘கூட்டு குடும்பத்தில் இருக்கும் மாப்பிள்ளையை தான் திருமணம் செய்து கொள்வேன். அனாதை போல் இருக்கும் ரோஹித்தை எனக்குப் பிடிக்கவில்லை’ என திடீரென நிச்சயதார்த்தத்தில் இருந்து வெண்பா எழுந்து கத்துகிறார்.

உடனே  ரோஹித்தை சௌந்தர்யா தன்னுடைய மகனாக ஏற்றுக் கொண்டு, தன்னுடைய குடும்பத்தில் ஒருவராக தத்து எடுத்துக் கொள்கிறார். அதன் பிறகு வெண்பா வேறு வழி இல்லாமல் அந்த நிச்சயதார்த்தத்தில் பொட்டி பாம்பாய் அடங்கினார்.

Trending News