செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

5 படங்களின் கதைக்காக தனது குரலை மாற்றிப் பாடிய எஸ்பிபி.. 2 வெவ்வேறு குரலில் பாடிய ஒரே பாடல்

அருமையான குரலுக்கு சொந்தக்காரரான எஸ்பிபி குரலை மாற்றிப் பாடுவது, மூச்சுவிடாமல் பாடுவது என்று அனைத்திலும் வல்லவர். அந்த வகையில் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் அனைவருக்கும் கட்டாயம் பிடிக்கும். இதனாலேயே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

மேலும் இவர் கதைக்காக ஒரே திரைப்படத்தில் இரண்டு வெவ்வேறு குரல்களில் பாடியும் அசத்தியிருக்கிறார். அதோடு அவர் குரலை அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மாற்றியும் பாடியிருக்கிறார். அந்தப் பாடங்கள் என்ன என்பதை பற்றி இன்று காண்போம்.

அஞ்சலி: மணிரத்னம் இயக்கத்தில் மூன்று தேசிய விருதுகளை தட்டிச் சென்ற இந்தப் படத்தில் ரகுவரன், ரேவதி, பேபி ஷாமிலி உள்ளிட்டோர் நடித்து இருப்பார்கள். படத்தில் ரகுவரன் குழந்தைகளுக்காக கதை சொல்லும் ஒரு இடத்தில் எஸ்பிபி வித்தியாசமான குரலில் பாடியிருப்பார்.

இந்திரன் சந்திரன்: கமல், விஜயசாந்தி நடிப்பில் உருவான தெலுங்கு திரைப்படத்தின் டப்பிங் தான் இந்த திரைப்படம். இதில் கமல் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். இந்திரன் மற்றும் சந்திரன் என்ற இரு கேரக்டர்களுக்காகவும் எஸ்பிபி வெவ்வேறு குரலில் பாடி அசத்தி இருப்பார். ரசிகர்கள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு குரலில் வித்தியாசம் காட்டி அவர் பாடியிருப்பது தனித்துவமான சாதனை.

ரோசாப்பூ ரவிக்கைக்காரி: சிவக்குமார், தீபா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் சிவகுமார் செம்பட்டையன் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். கிராமத்து கதை களத்தை கொண்ட இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. எஸ்பிபி மாமன் ஒருநாள் மல்லிகைப்பூ கொடுத்தான் என்ற பாடலை வித்தியாசமான குரலில் பாடி அசத்தி இருப்பார்.

விக்ரம்: கமல், அம்பிகா, சத்யராஜ், லிசி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படத்தில் ஏன் ஜோடி மஞ்ச குருவி என்ற பாடல் இடம் பெற்றிருக்கும். அந்தப் பாடலில் எஸ்பிபி கமலுக்காக ஒரு குரலிலும், ஜனகராஜுக்காக ஒரு குரலிலும் பாடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

வசந்த காலம்: விஜயன், சுமித்ரா, சுருளி ராஜன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த திரைப்படத்தில் எஸ்பிபி சுருளிராஜனுக்காக ஒரு பாடலை பாடியிருப்பார். சினிமா துறையில் வித்தியாசமான குரல் வளம் கொண்ட சுருளிராஜனுக்காக எஸ்பிபி பாடிய அந்தப் பாடல் பலரின் பாராட்டையும் பெற்றது.

Trending News