அஜித் ரசிகர்களின் மௌனம்: 2026 தேர்தலில் TVK-விற்கு சாதகமா அல்லது பாதகமா?

தமிழ் சினிமாவுல பல வருஷமா ஒரு மிகப்பெரிய விவாதம் போயிட்டு இருக்குன்னா, அது ‘தல – தளபதி’ ரசிகர்களோட மோதல் தான். தியேட்டர் வாசல்ல ஆரம்பிச்ச இந்த மோதல், இப்போ 2026 சட்டமன்றத் தேர்தல்ல எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தப்போகுதுன்னு எல்லாருமே ரொம்ப ஆர்வமா பாக்குறாங்க. விஜய் இப்போ முழுநேர அரசியல்ல இறங்கி ‘தமிழக வெற்றி கழகம்’ (TVK) கட்சியைத் தொடங்கிட்டாரு. இப்போ இருக்குற கேள்வி என்னன்னா, பல வருஷமா விஜய்யை எதிர்த்து நின்ன அஜித் ரசிகர்கள், இப்போ அரசியல்ல விஜய்க்கு சப்போர்ட் பண்ணுவாங்களா?

உண்மையைச் சொல்லப்போனா, அஜித் ரசிகர்கள் ஒரு ‘சைலன்ட் ஃபோர்ஸ்’. அஜித் தன்னோட ரசிகர் மன்றங்களைக் கலைச்சிட்டாலும், இன்னைக்கும் அவருக்காக உயிரைக் கொடுக்க ஒரு மிகப்பெரிய இளைஞர் பட்டாளம் இருக்கு. விஜய் அரசியலுக்கு வந்ததை அவங்க எப்படிப் பாக்குறாங்கன்னா, இது ஒரு மாற்றத்துக்கான தொடக்கம்னு ஒரு சிலரும், ‘திரையில தான் மோதல், ஆனா தமிழ்நாட்டோட நல்லதுக்கு யாராவது ஒருத்தர் வரணும்’னு நினைக்கிற நடுநிலை ரசிகர்களும் இருக்காங்க.

குறிப்பா, திராவிட கட்சிகளுக்கு மாற்றா ஒரு புது ரத்தம் வேணும்னு நினைக்கிற அஜித் ரசிகர்கள், விஜய்யோட கொள்கைகள் பிடிச்சிருந்தா கண்டிப்பா அவருக்கு ஓட்டுப் போட வாய்ப்பு இருக்கு.

ஆனா, இதுல இன்னொரு பக்கம் இருக்கு. பல வருஷமா சோசியல் மீடியாவுல விஜய்யையும் அவரோட ரசிகர்களையும் கடுமையா விமர்சனம் செஞ்ச ஒரு குரூப் இருக்கு. அவங்க அவ்வளவு சீக்கிரமா விஜய்யை ஏத்துப்பாங்களான்னு கேட்டா அது சந்தேகம் தான்.

ஆனாலும், சமீபத்துல நடந்த விஜய்யோட மாநாடுகள்லயும், ரோட் ஷோக்கள்லயும் அங்கங்க ‘அஜித் ரசிகர்கள்’ அப்படின்னு போஸ்டர்கள் தென்படுறது ஒரு பெரிய மாற்றத்தைக் காட்டுது. ‘எங்க தலைவன் தான் அரசியலுக்கு வரல, அதனால எங்க அண்ணன் விஜய்க்கு சப்போர்ட் பண்றோம்’னு சொல்லுற லெவலுக்கு இப்போ ஒரு புரிதல் வந்திருக்கு.

அரசியல் ரீதியா பார்த்தா, அஜித் ரசிகர்களோட ஓட்டுங்கிறது 2026 தேர்தல்ல ஒரு பெரிய ‘டிசைடிங் ஃபேக்டர்’. ஏன்னா, இவங்க பெரும்பாலோர் 18-லிருந்து 35 வயசுக்குள்ள இருக்குற இளைஞர்கள். விஜய்யோட ‘ஜனநாயகன்’ இமேஜும், அஜித்தோட ‘நேர்மை’ கொள்கையும் ஒத்துப் போறதா ரசிகர்கள் நம்பினா, அது TVK-விற்கு மிகப்பெரிய பலமா இருக்கும்.

விஜய் தன்னோட பேச்சுகள்ல அஜித்தையோ அவரோட ரசிகர்களையோ எங்கேயும் விட்டுக் கொடுக்காம பேசுறது, அவங்களை தன் பக்கம் இழுக்கிற ஒரு தந்திரமாவும் பார்க்கப்படுது.

இது வெறும் சினிமா ரசிகர்களோட உணர்வு மட்டும் கிடையாது. இது தமிழ்நாட்டோட எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம். அஜித் ரசிகர்கள் தங்களோட தனிப்பட்ட சினிமா ரசனையைத் தாண்டி, ஒரு நல்ல தலைவனா விஜய்யைப் பார்த்தாங்கன்னா, கண்டிப்பா TVK வெற்றிக்கு அவங்க ஒரு பெரிய தூணா இருப்பாங்க.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →