நிஜ வாழ்வின் நாயகன் சிவகார்த்திகேயன்: ஒரு மாணவனின் எதிர்காலத்தை மாற்றிய நெகிழ்ச்சியான உதவி

நடிகர் பிரேம்குமார் அவர்கள் தனது குடும்ப இக்கட்டான சூழலில், தனது மகனின் கல்விக்காக சிவகார்த்திகேயனிடம் உதவி கோரியபோது, அவர் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் உடனடியாக உதவியது மிகப்பெரிய மனிதாபிமானச் செயலாகும். திரையில் மட்டும் கதாநாயகனாக இல்லாமல், நிஜ வாழ்விலும் அவர் ஒரு உண்மையான ஹீரோ.

சிவகார்த்திகேயனின் இந்த உடனடி உதவி, ஒரு மாணவனின் எதிர்காலத்தையே மாற்றியமைத்துள்ளது. சரியான நேரத்தில் கிடைத்த அந்த நிதி உதவி, பிரேம்குமார் அவர்களின் மகனைத் தடையின்றி படிக்க வைத்து, இன்று அவர் ஒரு மிகச்சிறந்த நிலையை அடைய அடித்தளமாக அமைந்துள்ளது.

கல்வி என்பது ஒரு தலைமுறையையே உயர்த்தும் ஆயுதம். அந்த ஆயுதத்தை ஏந்துவதற்குத் தடையாக இருந்த பொருளாதாரச் சிக்கலைச் சிவா 50 லச்சம் பணத்தை கொடுத்து உதவியதால், இன்று அந்த இளைஞன் மாதம் 4 முதல் 5 லட்சம் ரூபாய் வரை ஈட்டும் அளவிற்குப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். இது வெறும் பண உதவி மட்டுமல்ல, ஒரு குடும்பத்தின் தலையெழுத்தையே மாற்றிய வாழ்க்கை.

இதனை பார்க்கும்போது சிவகார்த்திகேயன் நிச்சயம் பெருமிதம் கொள்வார். தான் செய்த உதவி வீணாகாமல், அது ஒரு இளைஞனைச் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்திற்கு கொண்டு சேர்த்திருப்பதை அறிவது எந்த ஒரு மனிதனுக்கும் ஆத்ம திருப்தியைத் தரும். ‘விதைத்தவன் உறங்கினாலும், விதைகள் உறங்குவதில்லை’ என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

திரையுலகில் எத்தனையோ பேர் புகழின் உச்சியில் இருந்தாலும், தான் கடந்து வந்த பாதையை மறக்காமல், கஷ்டப்படுபவர்களுக்குத் தானாக முன்வந்து உதவுபவர்கள் மிகச் சிலரே. அந்த வரிசையில் சிவகார்த்திகேயன் இன்று இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். புகழைத் தாண்டி அவரிடம் இருக்கும் இந்த நல்லுள்ளமே அவரை மக்கள் மனதில் நிலைநிறுத்துகிறது.

இந்த நெகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்த நடிகர் பிரேம்குமார் அவர்களுக்கு நன்றிகள். இதுபோன்ற பாசிட்டிவ் செய்திகள் சமூகத்தில் பரவும்போதுதான், மற்றவர்களுக்கும் பிறருக்கு உதவும் எண்ணம் மேலோங்கும். சிவகார்த்திக்யன் அவர்களின் இந்த நற்பணி தொடரட்டும், அந்த இளைஞனின் வெற்றியும் மென்மேலும் வளரட்டும்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →