2 வீரர்கள் அளித்த தொடர் ஏமாற்றம்.. அணில் கும்ளே சொல்வதை கொஞ்சம் கேளுங்கள் தோனி

2025 ஐபிஎல் தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான செயல்பாடுகளை அளித்துள்ளது சிஎஸ்கே அணி. தொடர்ந்து பத்தாவது இடத்திலேயே கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்லாமல் இருந்து வருகிறது. இங்கிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்ன செய்யலாம் என்பதை மூத்த வீரர் அனில் கும்ளே எடுத்துரைக்கிறார்.

வீரர்களை எடுக்கும் ஏலத்திலிருந்து சிஎஸ்கே அணி சொதப்பி வருகிறது.17 வருடத்தில் இந்த அளவிற்கு ஒரு மோசமான தோல்வியை சென்னை அணி சந்தித்தது இல்லை என்றே சொல்லலாம். இனி வரும் ஆட்டங்களில் என்ன செய்தால் ஓரளவு கௌரவமான நிலையை எட்ட முடியும் என்ற அறிவுரையை கும்ளே வழங்கியிருக்கிறார்.

எப்படியும் இனிமேல் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பில்லை, அதனால் இனி வரும் போட்டிகளில் மூத்த வீரர்கள் விலகிக் கொண்டு இளம் வீரர்களை தொடர்ந்து விளையாட செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்களது திறமையை அறிந்துகொண்டு அடுத்த வருடம் என்ன செய்யலாம் என்பதை இப்பொழுதே வரையறுத்து வைக்க வேண்டும்.

அது மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்கள் பெரிதும் சோதப்பி உள்ள நிலையில் அடுத்த வருடம் யாரை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். யாரை கழட்டி விட வேண்டும் என்பதைப் பற்றியும் ஆலோசனை செய்ய வேண்டும். இந்த ஆண்டு பெரிதும் நம்பப்பட்ட இரண்டு வீரர்கள் சோபிக்கவில்லை. அதிலும் ரச்சின் ரவீந்தராவின் செயல்பாடு மோசமாக இருந்தது.

தெவாங் கான்வே, சிவம் துபே, ரவீந்தரா, மதிஷா பதிராணா போன்ற திறமை வாய்ந்த வீரர்கள் இந்த தொடரில் மொத்தமாய் தொடப்பிவிட்டார்கள். இதனால் அவர்கள் இறங்கி விளையாடும் பொசிஷனை மாற்ற வேண்டும். குறிப்பாக டெத் ஓவர்களில் நாதன் எல்லீஸ் நன்றாக பந்து வீசுவார், அதையும் கணக்கில் எடுக்க வேண்டும். இனிவரும் போட்டிகளை வீரர்களின் தேர்வை கருத்தில் கொண்டு பார்க்க வேண்டும் என அணில் கும்ப்ளே கூறியுள்ளார்.