இங்கிலாந்து அணியை கவலைக்குள்ளாக்கிய பென் ஸ்ட்ரோக்ஸ்.. தொடரில் இருந்து விலகும் அபாயம் 

இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி “Lord’s” மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. நேற்றைய முதல் நாள் முடிவில் 251ரன்களுக்கு 4  விக்கெட்டுகளை இழந்திருந்தது.

களத்தில் ஜோ ரூட் மற்றும்  பென் ஸ்ட்ரோக்ஸ் நிற்கிறார்கள். இருவரும் நிலைத்து நின்று விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது இதில் தான் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கேப்டன் பொறுப்பேற்று  விளையாடி வரும்  பென் ஸ்ட்ரோக்ஸ் உடல் தகுதி தான் இங்கிலாந்து அணிக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.

 நேற்றைய போட்டியில் அடிவயிறு மற்றும் தொடை பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார் ஸ்ட்ரோக்ஸ். இது நேற்றைய நாள் பிரச்சனை இல்லை கடந்த சில மாதங்களாகவே அவர் இந்த மாதிரி பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

 இலங்கைக்கு எதிரான தொடரிலும் இப்படி அவதிப்பட்டு போட்டியிலிருந்து விலகினார். அவரால் விக்கெட்டுகளுக்கு இடையே ரன் ஓட முடியவில்லை.  இப்படி பிரச்சனையில் சிக்கிவரும் அவர் வெளியேறினால் மீண்டும் விளையாட வருவதில்லை. தொடர்ந்து இதே மாதிரியான இன்னல்களை அவரால் இங்கிலாந்து அணி சந்தித்து வருகிறது.

 இங்கிலாந்து அணி விளையாட உள்ள முக்கியமான தொடரான ஆசஸ் டெஸ்ட் போட்டிகள் தொடங்க உள்ளது. அதற்கு முக்கியத்துவம் கொடுத்து விளையாடும் சூழ்நிலையில் இருக்கிறார் ஸ்ட்ரோக்ஸ். இதனால் இந்திய  தொடரிலிருந்து விலகும் அபாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.