சௌரவ் கங்குலிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட மகேந்திர சிங் தோனி, புது இந்திய அணியை கட்டமைத்தவர் என்ற பெருமையை இன்றுவரை தாங்கி வருகிறார். ஆனால் அதற்கு முன்பே சௌரவ் கங்குலி இதற்கு நல்ல ஒரு அடித்தளம் போட்டு வைத்திருந்தார்.
சச்சின், சேவாக், கம்பீர் போன்ற வீரர்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. வயது மூப்பு காரணமாக அவர்கள் ஸ்லோ வீரர்களாக மாறிவிட்டனர் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார். ஒரு போட்டியில் அபாரமாக பாய்ந்து கேட்ச் பிடித்த சேவாக் எனக்கு அதே வயது தான் என வெளிப்படையாக தோனியை தாக்கினார்.
தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணி சாதிக்க வேண்டும் என்றால் இளம் படை வேண்டுமென தோனி பிசிசிஐக்கு நெருக்கடி கொடுத்து, இளம் இந்திய அணியை உருவாக்கினார். இப்பொழுது பயிற்சியாளராக செயல்பட்டு வரும் கௌதம் கம்பீரும் அதைத்தான் முன் வைக்கிறார்.
விராட் கோலி, ரோஹித் சர்மா 20 ஓவர் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்து விட்டனர். ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாட ஆசைப்படும் அவர்கள் தொடர்ந்து விளையாடினால் பரவாயில்லை, மூன்று மாதம், நான்கு மாதம் இடைவெளி விட்டு புதிதாய் வந்து விளையாடுவதால் அவர்கள் பார்ம் கேள்விக்குறியாக இருக்கிறது.
இதனால் அவர்களை ஒருநாள் போட்டியில் ஃபார்ம் மற்றும் பிட்னஸ் இருந்தால் தான் சேர்க்க வேண்டும். ஒருநாள் போட்டி தொடரில் விளையாடும் முன்பு இதை இருவரும் நிரூபிக்க வேண்டும் என கம்பீர் பிசிசிஐயுடன் வாதிட்டு வருகிறார். இனிமேல் இந்தியா நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா மண்ணில் 50 ஓவர் போட்டி விளையாட உள்ளது. இப்படி சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் சுப்மன் கில்லையே தொடர்ந்து கேப்டனாக நியமிக்கலாமென பரிந்துரைக்கிறார்.