ஐபிஎல் 14 வயது சூரியவன்சிக்கு சேவாக் போட்ட முட்டுக்கட்டை.. கோலி கிட்ட கத்துக்கணும்னு கொடுத்த அறிவுரை

2025 ஐபிஎல் தொடரில் 14 வயது இளம் வீரர் வைபவ்  சூரியவன்சி விளையாடி வருகிறார். ராஜஸ்தான்  ராயல்ஸ் அணியில் விளையாட தேர்வாகி இருக்கும் இந்த பையன் அனைவரது எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளார். தான் களமிறங்கிய முதல் போட்டி, முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்துள்ளார்.

1.10 கோடிகள் கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த  இளம் வீரரை எடுத்துள்ளது. காயம் காரணமாக விலகி உள்ள சஞ்சீவ் சாம்சனுக்கு பதிலாக  களமிறங்கினார் வைபவ்  சூரியவன்சி. முதல் பந்தில் 6 எண்கள் அடித்த அவர் 20 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் அடுத்த போட்டியில் அதிரடியாக விளையாட ஆரம்பித்து 16 ரண்களில் அவுட் ஆனார்.

வைபவ்  சூரியவன்சி இப்படி விளையாடுவது ஆபத்து என அதிரடி சேவாக் அறிவுரை வழங்கியுள்ளார். இப்படி விளையாடினால் அடுத்த ஓரிரு ஆண்டுகளிலே ஐபிஎல் தொடரிலிருந்து அவர் காணாமல் போய்விடுவார். விராட்கோலியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என பல டிப்ஸ்  கொடுத்து வருகிறார்.

 நடந்துவரும் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களை பார்த்தால், அவர்கள் அனுபவம் வாய்ந்த வீரராக இருக்கிறார்கள். ஆட்டத்தின் போக்கை அறிந்து விளையாட வேண்டும். இப்படி அவசரப்பட்டு   எடுத்தோம் கவுத்தோம்  என்று விளையாடக்கூடாது. விராட் கோலிக்கு இப்பொழுது வயது 38.

 19 வயதிலிருந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார் விராட் கோலி. கிட்டத்தட்ட 20 வருடங்கள்  விளையாடி வருகிறார். அதிரடியாக ஆடிவரும் இளம் வீரர்கள் யாருமே பெரிய ரண்களை எட்ட முடியவில்லை. அணியை வெற்றி பாதைக்கு அழைத்து, மேட்ச்சை முடிக்க  கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை கூறியுள்ளார்.