லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்தியா வரலாறு படைத்தது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2க்கு 2 என இரு அணியினரும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் நான்காவது டெஸ்ட் போட்டி மற்றும் ட்ராவானது. இருநாட்டு கேப்டன்களும் கோப்பையை பகிர்ந்து கொண்டனர்.
போட்டி தொடங்குவதற்கு முன்பு இங்கிலாந்து அணியினர் இந்தியாவை நாங்கள் ஒயிட் வாஸ் செய்வோம். 5 போட்டிகளையும் வெல்வோம். இது ஆஸ்திரேலியாவுடன் மோதவிருக்கும் ஆசஸ் தொடருக்கு முன் எங்களுக்கு ஒரு பயிற்சி போட்டி என்றெல்லாம் ஏளனம் செய்தார்கள்.
இப்பொழுது இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கள்ளம் இந்தியாவை வெகுவாக பாராட்டி வருகிறார். இந்திய அணி எங்களுக்கு சரியான பாடம் புகட்டிவிட்டது என்று கூறியுள்ளார். ஆரம்பத்தில் அப்படி பேசியவர்கள் இப்பொழுது முழுவதுமாக இந்தியாவிடம் சரண்டர் ஆகி விட்டனர்.
ஆறு வாரங்கள், 5 டெஸ்ட் போட்டி என இங்கே வந்து விளையாடிய இந்தியா ருத்ர தாண்டவம் ஆடிவிட்டது. சகோதரத்துவம், அன்பு, சண்டை, போர்க்குணம் என அனைத்தையும் இந்தியா எங்களுக்கு கொடுத்தது. இந்த வெற்றிக்கு அவர்கள் 100% தகுதியுடையவர்கள். என்று புகழ்ந்து பேசி இருக்கிறார்.
கடைசி வரை போராடிய இந்தியாவின் வெற்றி குதிரை சிராஜு தான் இந்தியாவிற்கு முழு நம்பிக்கை கொடுத்து போட்டியை மாற்றினார். நாங்கள் விளையாடியதில் இந்தப் போட்டி மாதிரி எந்தத் தொடரும் அமைந்தது கிடையாது. இந்த போட்டியில் எங்களுக்கு தோல்வி எங்கே வந்தது என்பதை கூட தெரியாமல் இந்தியா வென்றது.