Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ஸ்ரீலிலாக்கு கொஞ்சம் கூட சளைக்காத ஹீரோயின்.. விஜய்69க்கு துண்டு போட்ட இளஞ்சிட்டு

ஸ்ரீலிலாக்கு கொஞ்சம் கூட சளைக்காத ஹீரோயின்.. விஜய்69க்கு துண்டு போட்ட இளஞ்சிட்டு

தளபதி 69 சூட்டிங் கோலாக்களமாக தொடங்க உள்ளது. அக்டோபர் ஐந்தாம் தேதி பயனூரில் முதல் கட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்கவிருக்கிறது. இதற்காக பிரம்மாண்ட செட் ஒன்றை அமைத்துள்ளனர். ஆரம்பத்திலேயே பாடல் காட்சி ஒன்றை படமாக்க இருக்கிறார்கள். இந்த படத்தில் இரண்டு […]

தளபதி 69 சூட்டிங் கோலாக்களமாக தொடங்க உள்ளது. அக்டோபர் ஐந்தாம் தேதி பயனூரில் முதல் கட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்கவிருக்கிறது. இதற்காக பிரம்மாண்ட செட் ஒன்றை அமைத்துள்ளனர். ஆரம்பத்திலேயே பாடல் காட்சி ஒன்றை படமாக்க இருக்கிறார்கள்.

இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இப்போதைக்கு கமிட்டாகி இருக்கிறார்கள். அதுபோக பாபிதியோல், பிரகாஷ்ராஜ், நரேன், பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன் போன்றவர்களும் நடிக்கிறார்கள். விஜய் இந்த படம் எல்லா தரப்பு ஆடியன்சையும் கவர வேண்டும் என உத்தரவு போட்டு இருக்கிறார்.

பூஜா ஹெக்டே மற்றும் மம்தா பஜ்லூ இரண்டு பேரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள். ஆரம்பத்தில் மம்தா கதாபாத்திரத்திற்கு தெலுங்கு சினிமா உலகை கலக்கி வரும் ஸ்ரீ லீலாக்கு தான் வாய்ப்பு வந்தது. ஆனால் அவர் தொடர்ந்து படங்களில் பிசியாக இருப்பதால் விஜய் 69 படத்திற்கு கால் சீட் கொடுக்க முடியவில்லை.

விஜய்69க்கு துண்டு போட்ட இளஞ்சிட்டு

ஸ்ரீ லீலா போலவே நடனம் ஆடும் திறமை கொண்டவர் மற்றும் தங்கை, மகள் போன்ற கதாபாத்திரத்திற்கு ஏற்ற முகம் இவர் தான் என்று இப்பொழுது மம்தா பஜ்லூவை தேர்ந்தெடுத்து விட்டனர். அவரும் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் இருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

ஏற்கனவே ஸ்ரீ லீலா, மகள் தங்கை போன்ற கதாபாத்திரங்களில் தெலுங்கு சினிமாவில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த பகவந் கேசரி படத்தில் பாலையாவிற்கு மகளாக நடித்திருந்தார். இப்பொழுது அதே போல் மகள் கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் மம்தா.

T

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.