உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒருபுறம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் மறுபுறம் இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கி கைதாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா ஏற்கனவே ஒரு முறை பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கி தப்பித்த நிலையில் மீண்டும் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் கைது செய்யப்பட்டார்.
இலங்கையணி இங்கிலாந்துக்கு எதிராக தனது கடைசி குரூப் ஆட்டத்தை முடியும்போது இந்த சம்மதம் நடந்துள்ளது. இதை அடுத்து இன்று காலை அவர் இல்லாமல் இலங்கை அணி ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து இலங்கை திரும்பியது.
Also Read: சொல் புத்தியும் இல்ல, சுய புத்தியும் இல்ல.. பாபர் அசாமை மூளை இல்லாத கேப்டன் என சாடிய 2 ஜாம்பவான்கள்
மேலும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு தேர்வான குணதிலகா, கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு தொடையில் காயம் ஏற்பட்ட காரணமாக உலகக் கோப்பை தொடரிருந்து விலகினார். அவருக்கு பதிலாக அஷேன் பண்டார சேர்க்கப்பட்டார்.
இருப்பினும் இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாகம் வீட்டுக்கு அவரை அனுப்பாமல் அணியுடன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 2018-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட்டில் முறைகேடு செய்ததற்காக குணதிலகாவை இடைநீக்கம் செய்யப்பட்டார்.
Also Read: நோ பாலில் கொடுக்கப்படும் 4 அவுட்டுகள்.. விராட் கோலி போல்ட் ஆகியும் விதிமுறையால் ஏற்பட்ட பரிதாபம்
முன்பு இலங்கையில் நோர்வே பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறி இலங்கை வீரர் தனுஷ்க குணதிலகா மற்றும் அவரது நண்பர் ஒருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். இந்த வழக்கில் குணதிலகாவின் தலையீடு இல்லை என்று இவரை போலீசார் விடுவித்து, அவரது நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த மூன்று டி20 போட்டிகளில் இலங்கை அணி வீரர்களான குசல் மெண்டிஸ், தொடக்க பேட்ஸ்மேன் தனுஷ்கா குணதிலகா மற்றும் விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா ஆகியோர் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக எச்சரிக்கப்பட்டனர். இவ்வாறு தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிய இலங்கை அணி வீரர் தனுஷ்கா குணதிலகா தற்போது கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read: அவருக்கு நிகர் வேறு யாருமில்லை.. மொத்த அணியையும் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய பாகிஸ்தான் ஜாம்பவான்