சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

உலக சாம்பியன் பற்றி கவலையே இல்லை.. காம்பிற்கு சவால் விடும் சனத் ஜெயசூர்யா

இந்திய அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. வரும் சனிக்கிழமை 27ஆம் தேதி 20 ஓவர் போட்டி தொடங்குகிறது. இலங்கை நாட்டினர் இந்த போட்டியை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். உலக கோப்பைக்கு பின்னர் இலங்கை அணி புது உத்வேகத்துடன் களமிறங்குகிறது.

எப்போதும் இல்லாத ஒரு புதிய இந்திய அணி இலங்கையுடன் மோத உள்ளது தான் அந்த நாட்டு கிரிக்கெட் வீரர்களையும், மக்களையும் ஒரு பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இந்திய அணி விராட், கோலி ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் இல்லாமல் 20 ஓவர் போட்டியில் களம் இறங்குகிறது.

20 ஓவர் போட்டிகளுக்கு இந்திய அணிக்கு சூரியகுமார் யாதவும, 50 ஓவர் போட்டியில் எப்பொழுதும் போல் ரோகித் சர்மாவும, கேப்டனாக செயல்படுகின்றனர். உலகக்கோப்பை படு தோல்விக்கு பின்னர் இலங்கை அணிக்கு புதிய பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யாவும், கேப்டனாக சரித் அசலங்காவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சனத் ஜெயசூர்யா, காம்பிற்கு விடும் சவால்

இலங்கை அணி பயிற்சியாளர் ஜெயசூர்யா, விராட் கோலி ரோஹித் சர்மா மற்றும் ஆல்ரவுண்ட் ரவீந்திர ஜடேஜா இல்லாத இந்திய அணியை வீழ்த்த எங்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்று ஆர்ப்பரித்து வருகிறார்கள். இலங்கை அணி இந்தியாவை வெல்லும் பட்சத்தில் மூன்று வருடங்களுக்கு அவர்களுக்கு ஊக்கமாய் அமையும் என கூறி வருகின்றனர்.

உலகக்கோப்பை படு தோல்விக்கு பின்னர் இலங்கை அணியில் பல மாற்றங்கள் உருவாகியுள்ளது. குறிப்பாக புது பயிற்சியாளர் ஜெயசூர்யாவும், கேப்டன் அசலங்காவும் அணியை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். முதற்கட்டமாக இந்தியாவை வைத்து பல பரிட்சையை மேற்கொள்கின்றனர். சீனியர்கள் இல்லாத இந்திய அணியை எளிதில் வீழ்த்துவோம் என ஆர்ப்பரித்து வருகிறார்கள்.

Trending News