புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இலங்கை அணிக்கு எதிரான இந்தியாவின் பாகுபலி.. சனத் ஜெயசூர்யா இன்றைய போட்டிக்கு போடும் ஸ்கெட்ச்

இலங்கையில் உள்ள பல்லேகேலே மைதானத்தில் இன்று, முதல் 20 ஓவர் போட்டி ஆரம்பிக்கவிருக்கிறது. இந்திய அணியின் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா விராட் கோலி, ரவிந்திர ஜடேஜா ஆகியோர் 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டதால் புது கேப்டன் சூரிய குமார் யாதவ் தலைமையில் இளம் இந்திய அணி இன்று பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது.

பல்லேகேலே மைதானத்தில் இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. லைட் வெளிச்சத்துக்கு கீழ் விளையாடுவதால் இந்த மைதானம் பவுலர்களுக்கு சாதகமாகவே இருக்கும். முதல் நான்கு ஓவர்கள் தாக்கு பிடித்து விளையாடுவது மிகவும் கடினம். அதனால் டாஸ் ஜெயிக்கும் அணி பந்துவீச்சை தான் தேர்ந்தெடுக்கும்.

இந்திய அணி பொறுத்த வரை எஸ்.எஸ்.வி. ஜெய்ஸ்வால் மற்றும் சுபம் கில் இருவரும் ஓப்பனிங் வீரர்கள். இவர்கள் முதல் நான்கு முதல் ஐந்து ஓவர்கள் தாக்குப் பிடித்து விளையாடிவிட்டால் இந்திய அணிக்கு வெற்றி நிச்சயம். ஆனால் இது இலங்கையில் நடைபெறும் போட்டி என்பதால் சூழ்நிலை அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.

சனத் ஜெயசூர்யா இன்றைய போட்டிக்கு போடும் ஸ்கெட்ச்

ஏற்கனவே இந்தியா அணிக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளாகவே மோசமாய் செயல்பட்டு வருகிறது இலங்கை அணி. அதற்கு நிச்சயமாக பதிலடி கொடுக்கும் விதமாக புது பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா மற்றும் கேப்டன் சரித் அசலங்கா இருவரும் அணியை பலப்படுத்தி வருகிறார்கள்.

இலங்கை அணியை பொறுத்த வரை அவர்கள் இன்று வரை பயந்து நடுங்கும் ஒரு பவுலர் முகமது சிராஜ். பல போட்டிகளில் இலங்கை அணியை சீர்குலைய செய்துள்ளார் சிராஜ். ஏற்கனவே ஏசியா கப் பைனலில் 51 ரண்களில்இலங்கையை சுருட்டி வெற்றி பெற்றது இந்திய அணி. சிராஜை சமாளித்து விளையாடும் விதத்தை ஜெயசூர்யா அணியில் வலியுறுத்தி வருகிறார்.

Trending News