செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

உலகக் கோப்பை இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனம்.. இளம் வீரர்களை ஒதுக்கிய அஜித் அகார்கர்

12ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் உலகக்கோப்பை போட்டிகள் நடக்கவிருக்கிறது, இந்த போட்டிகள் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் 15 பேர் கொண்ட வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பிசிசிஐ தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர் பலம் வாய்ந்த அணியை தேர்வு செய்திருக்கிறார்,

இந்திய அணியை பொறுத்தவரை பலம் மற்றும் பலவீனம் சரிசமமாக உள்ளது. இளம் திறமை மிக்க வீரர்கள் பல பேர் உலகக் கோப்பை 15 பேர் கொண்ட அணியில் இல்லை. இப்பொழுது தேர்வு செய்துள்ள அணி உலக கோப்பையை வெல்லுமா என்பது பற்றியும், அணியின் பலம் மற்றும் பலவீனத்தை பற்றியும் பார்க்கலாம்.

இந்திய அணியில் தேர்வான பதினைந்து வீரர்கள் இவர்கள்தான். விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஸ்ரேயாஸ் ஐயர், கில், சூரியகுமார், இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, முகமது சாமி, முகமது சிராஜ், பும்ரா,குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் பட்டேல் .

இப்பொழுது இந்திய அணியின் பலவீனமாக பார்க்கப்படுவது பவுலிங் தான்.ஒரு ஆப்ஸ்பின் பவுலர் இல்லாதது இந்திய அணியின் குறையே. அனுபவம் வாய்ந்த அஸ்வினை அணியில் சேர்த்து இருக்கலாம். கே எல் ராகுல் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் சற்று ஃபாம் அவுட்டில் தான் இருக்கிறார்கள். ஹர்திக் பாண்டியாவை தவிர ஃபாஸ்ட் ஆல்ரவுண்டர் யாரும் இல்லை. ஒரு அளவு கை கொடுக்கக் கூடிய புவனேஷ் குமாரும் அணியில் இல்லை.

இந்திய அணியின் பலம் என்று பார்த்தால் போட்டிகள் இந்தியாவில் நடப்பது ஒரு பெரிய பலம். இந்திய அணி வீரர்கள் சுழற் பந்து நன்றாக அடையக் கூடியவர்கள். நம் நாட்டில் உள்ள பிட்ச்சுகள் அனைத்தும் சுழற் பந்திருக்கு ஏற்றது. அஸ்வின் அல்லது வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் இடம் பெற்றால் மேலும் வலுபெறும்.

விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா போன்ற சீனியர் வீரர்களுக்கு பெரும்பாலும் இது கடைசி உலக கோப்பையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய்ஸ்வால், சஞ்சுசாம்ன், ருத்ராஜ் , சிவம் டுபே போன்ற இளம் வீரர்கள் அணியில் சேர்க்கப்படாதது ஏமாற்றமாக இருக்கிறது.

Trending News