புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Suchithra: கேவலமான மஞ்சுமல் பாய்ஸ் இவங்கதான், பார்ட்டி கலாச்சாரம் வர இவங்க தான் காரணம்.. பகீர் கிளப்பிய சுசித்ரா

Suchithra: பின்னணி பாடகி சுசித்ரா கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். 14 வருடங்களுக்கு முன்பு வெளியான சுச்சி லீக்ஸ் பற்றி இப்போது மனம் திறந்து பேசியதுடன் மட்டுமில்லாமல் பல நடிகர்களின் அந்தரங்க வாழ்க்கையை பற்றி வெளிச்சம் போட்டு காட்டி விட்டார்.

சுச்சி லீக்ஸ் விஷயத்துடன் சம்பந்தப்பட்ட நடிகர்களை மட்டும் தான் பேசுவார் என இதுவரை எதிர்பார்த்து இருப்பார்கள். ஆனால் அவர் தமிழ் சினிமாவில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை புட்டு புட்டு வைத்து விட்டார். இதில் பெரிய அளவில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் தமிழ் சினிமாவில் அதிகரித்திருக்கும் போதை கலாச்சாரம் தான்.

படத்துக்கு படம் ஒக்காந்து போதை ஒழிப்பை பற்றி ஹீரோக்கள் கிளாஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நடத்தும் பார்ட்டிகளில் போதை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுவதாய் சுசித்ரா குற்றம் சாட்டி இருக்கிறார்.

ஹாலிவுட் ரேஞ்சுக்கு தமிழ் படத்தை மாற்றியே ஆக வேண்டும், தமிழ் படத்தை தூக்கி நிறுத்துவதற்காக தான் நாங்கள் இருக்கிறோம் என்பதைப் போல் சிலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இந்த இடத்துக்கு போனா தான் எனக்கு பாட்டு வரும், இசை வரும், ஸ்கிரிப்ட் வரும் என்று செலிபிரிட்டிகள் சொல்வதுண்டு. ஆனால் அங்கே போய் முழுக்க குடித்துவிட்டு போதையில் தான் இதையெல்லாம் செய்கிறார்கள் என்று சுசித்ரா சொல்லி இருக்கிறார்.

இப்போது வரும் சில படங்களில் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்று தெரியாமல் திரைக்கதை இருக்கிறது. இதற்கு எல்லாமே அந்த போதைப் பழக்கம் தான் காரணம் என சுசித்ரா குறை சொல்லி இருக்கிறார்.

போதை கலாச்சாரம் வர இவங்க தான் காரணம்

தமிழ் சினிமா நடிகர்கள் கலந்து கொள்ளும் பார்ட்டிகளில் போதை கலாச்சாரத்தை கொண்டு வந்தது ஒரு குறிப்பிட்ட கூட்டம் என்று வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார். வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சிம்பு, யுவன் சங்கர் ராஜா என தமிழ் சினிமாவில் மஞ்சுமல் பாய்ஸ் கூட்டம் ஒன்று இருக்கிறது.

இவர்கள்தான் இந்த போதை கலாச்சாரத்தை நடிகர்கள் கலந்து கொள்ளும் வார்த்தைகளில் களம் இறக்கியது. அதனால் தான் தமிழ் சினிமா நடிகர்கள் இப்போது கெட்டுப் போய் இருக்கிறார்கள். அப்படி ஒரு போதை நிகழ்வில் தான் இந்த சுச்சி லீக்ஸ் விஷயம் உருவானது, இந்த போதை கலாச்சாரத்தால் தான் என்னுடைய வாழ்க்கையை இப்படியானது என சுசித்ரா மனம் நொந்து பேசி இருக்கிறார்.

Trending News