வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

இன்னும் 2 வர்ஷம் வெயிட் பண்ணி தான் ஆகணும்.. அவரை கைய்யிலே பிடிக்க முடியல என புலம்பும் சுதா கொங்காரா

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக உருவெடுத்துள்ளார். தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அமரன்’ படத்தில் அவர் நடித்துள்ளார், இப்படம் வரும் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

இதே சமயத்தில், சிவகார்த்திகேயன் தனது 23வது படமாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அதோடு, சிபி சக்கரவர்த்தி மற்றும் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவருடைய அடுத்த படங்களில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ‘புறநானூறு’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இன்னும் 2 வர்ஷம் வெயிட் பண்ணனும்

ஆனால் இந்த படத்திற்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ‘புறநானூறு’ படத்தில் முதலில் நடிகர் சூர்யா நடிக்க இருந்தபோதும், சில காரணங்களுக்காக அவர் விலகியதின் பின்னர் சிவகார்த்திகேயன் இப்படத்தில் இணைந்துள்ளார். இத்திரைப்படம் இந்தி திணிப்பு தொடர்பான கதைக்களத்தில் உருவாக இருக்கின்றது என கூறப்படுகிறது.  அதனால் சூரிய நடிக்கவில்லை என்ற தகவலும் வெளியானது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிக்கப்போகிறார் என்று சொன்னதுமே அதீதமான எதிர்பார்ப்பு ஏற்பட்டது.  இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் டிசம்பர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

ஆனாலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ஏற்கனவே அவர் sign செய்த ப்ரொஜெக்ட்ஸ் முடித்தபின்னர் தான் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அதனால் சுதா கொங்காரா வெயிட் பண்ணி தான் ஆகவேண்டும்.  மேலும் இந்த படம் 2026 வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.  மொத்தத்தில் சிவகார்த்திகேயனுக்கு மூச்சு விட கூட நேரமில்லை என்றும் சொல்லலாம். 

Trending News