ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

இந்திய அணியின் தேவையில்லாத சுமையானார் ரோஹித்.. சிட்னி போட்டிக்கு கம்பீர் சொன்ன புது கதை

ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா தொடரில் மிகவும் திணறி வருகிறார். 4 டெஸ்ட் போட்டிகளில் 100 ரன்களை கூட தாண்டவில்லை. இதனால் அவருடைய பார்ம் கேள்விக்குறியானது. இந்திய அணியில் தேவையில்லாத லக்கேஜ் ஆகிவிட்டார் ஹிட் மேன் ரோஹித்.

ரவி சாஸ்திரி முதல் அனைத்து முன்னால் நட்சத்திர வீரர்களும் ரோகித் சர்மாவின் ஆட்டத் திறனை பற்றி கேள்வி எழுப்பி வருகிறார்கள். 40 வயதை நெருங்கியும் இவர் ஏன் இந்திய அணியில் விளையாடி வருகிறார் என பேசி வருகிறார்கள்.

ரோஹித் சர்மாவின் இடத்திற்கு சுப்மன் கில் தகுதியானவர். அவரை உட்கார வைத்து விட்டு ரோஹித் சர்மா மோசமாய் விளையாடி வருவதை பற்றி கேள்வி வந்த வண்ணம் இருக்கிறது. இப்பொழுது சிட்னியில் நடைபெறும் கடைசி போட்டியில் ரோகித் சர்மா விளையாடுவாரா என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பும்.

கேப்டன் ரோகித் சர்மா இல்லாமல் செய்தியாளர்களை சந்தித்துள்ளார் பயிற்சியாளர் கௌதம் கம்பீர். இதன் மூலம் அடுத்த டெஸ்டில் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்பது 70% உறுதியாகிவிட்டது. அதுமட்டுமின்றி அடுத்த டெஸ்டில் இந்திய அணிக்கு புது கேப்டன் என்று கூறியுள்ளார்.

கம்பீர் கூறியதிலிருந்து சிட்னி போட்டியில் பும்ரா இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதனால் ரோஹித் சர்மா இடத்தில் சுப்மன் கில் விளையாடுவார் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் அவரும் ரோகித் இடமான ஸ்லீப்பில் பில்டிங் செய்து பயிற்சி எடுத்து வருகிறார்.

Trending News