ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

6 ஆண்டுகளாக மன உளைச்சலால் தவித்த மனோபாலா.. சாமி நடிகரால் இறுதி வரை நிறைவேறாமல் போன ஆசை

இயக்குனராகவும், நடிகராகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த மனோபாலா கடந்த மே 3 அன்று உடல்நல குறைவால் உயிர் நீத்தார். பலரையும் கலங்கடித்த இந்த மரணம் தமிழ் சினிமாவிற்கு ஏற்பட்ட பெரும் இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும். அதைத்தொடர்ந்து இப்போது மனோபாலா பற்றிய செய்திகள் தான் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

அதில் அவர் கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு பிரச்சினையால் மன உளைச்சலில் இருந்தார் என வெளியாகி உள்ள செய்தி பலரையும் அதிர்ச்சியாக்கி இருக்கிறது. அதாவது மனோபாலா தயாரிப்பாளராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள ஆசைப்பட்டார். அதற்கான முதல் படியாய் அமைந்தது தான் சதுரங்க வேட்டை.

Also read: ரிலீசுக்கு முன்பே உயிர் நீத்த 2 ஜாம்பவான்கள்.. பெயரை நிலைக்க வைக்க வரும் இந்தியன் 2

எச் வினோத் இயக்கத்தில் வெளிவந்த அப்படம் மிகப்பெரும் அளவில் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து மனோபாலா பாம்பு சட்டை என்ற திரைப்படத்தையும் தயாரித்திருந்தார். பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த அப்படம் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. அதனால் மனோபாலா சில நஷ்டங்களையும் சந்தித்தார்.

அதை தொடர்ந்து சதுரங்க வேட்டை 2 திரைப்படத்தை ஆரம்பித்தார். அப்போது வினோத் வேறு சில படங்களில் பிஸியாக இருந்த காரணத்தினால் இப்படத்திற்கு திரைக்கதையை மட்டும் எழுதி இருந்தார். அந்த வகையில் அரவிந்த்சாமி, த்ரிஷா நடிப்பில் நிர்மல் குமார் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு படத்தின் தயாரிப்பு தொடங்கியது.

Also read: சாமினு அழைத்தால் சாமி ஆகிவிடுவாரா.! ஓவர் ஹெட் வெயிட்டில் இரங்கல் செய்தி பதிவிட்ட இளையராஜா

ஆனால் பல பிரச்சனைகளின் காரணமாக இப்படம் இப்போது வரை வெளிவரவில்லை. இதற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர் மீதி சம்பளத்தை செட்டில் செய்யவில்லை என்று அரவிந்த்சாமி டப்பிங் பேச வராதது தான். இது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் மனோபாலா அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்தார். அதை தொடர்ந்து படம் வெளிவரும் என்று அறிவிப்புகள் கூட வந்தது.

ஆனாலும் படம் வெளிவர முடியாமல் கிடப்பில் இருக்கிறது. இதுவே மனோபாலாவுக்கு பெரும் மன அழுத்தத்தை கொடுத்திருக்கிறது. எப்படியாவது படத்தை வெளியிட வேண்டும் என அவர் பல வழிகளிலும் முயற்சி செய்தார். ஆனாலும் இறுதிவரை அவருடைய ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது. ஒருவேளை அரவிந்த்சாமி மட்டும் பிரச்சனை செய்யாமல் டப்பிங் பேசிக் கொடுத்திருந்தால் எப்போதோ இப்படம் வெளி வந்திருக்கும்.

Also read: அப்பாவை சந்தோஷப்படுத்திய மகன்.. மனதை கனக்க வைத்த மனோபாலாவின் இறுதி நிமிடங்கள்

Trending News