திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

காதல் தோல்விக்கு தற்கொலை தான் முடிவு.. தகர்த்தெறிந்த புன்னகை மன்னன் கமலின் 5 ஹிட் படங்கள்

Actor Kamal: கமலிடம் ஒரு பிரச்சனை என்னவென்றால் வெகு காலம் கழித்து எடுக்க வேண்டிய படங்களை எல்லாம் முன்னரே எடுத்து படம் ஆக்கியதுதான். புது புது டெக்னாலஜியை 80 களிலேயே தன் படத்தில் புகுத்தி பல படங்களை வெற்றி பெற செய்துள்ளார். கமல் புகுந்து விளையாடி வாயடைக்க வைத்த சூப்பர் ஹிட் படங்கள்.

விக்ரம்: அமரர் சுஜாதா அவர்களின் கதை அவருடன் கமல் திரைக்கதை அமைத்து ராஜசேகர் இயக்கிய படம் விக்ரம். இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். அக்னி புத்திரன் என்ற ராக்கெட்டை கடத்திவிடும் கும்பலில் இருந்து விக்ரம் எப்படி நாட்டை காப்பாற்றுகிறார் என்பது கதை. அணு ஆயுதத்தை உரு குலைக்கும் அறிவை கொண்ட உயர் படித்த பொறியாளர் ஹீரோயினும் அவருக்கு உதவுகிறார். இந்த படத்தில் தான் முதல் முதலில் கம்ப்யூட்டர் வொர்க் ஸ்டேஷன் அமைக்கப்பட்ட காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.

பாகுபலி 1 படத்தில் வரும் கிளுக்கி என்ற கற்பனை மொழியை போல கற்பனை நாடான சலாமியா நாட்டில் பேசும் மொழி ஒன்று இப்படத்தில் பேசப்பட்டிருக்கும், இதை உருவாக்கியவர் கமல். இது போன்று பல புதுமைகளை படத்தில் புகுத்தி சீரியஸான படத்தை ஜாலியாக கொண்டு சென்றுருப்பார் கமல்.

Also Read : தரமான சம்பவத்திற்கு காத்திருக்கும் கமல்.. விஸ்வரூப வேகத்தில் பறக்கும் பச்சைக்கொடி

புன்னகை மன்னன்: கமல் நடிப்பில் கே. பாலச்சந்தர் அவர்கள் இயக்ககத்தில் இளையராஜாவின் இசை இசையில் மாபெரும் வெற்றி பெற்ற படம் புன்னகை மன்னன். காதல் தோல்வியால் காதலன் காதலி ஒரு குன்றின் மீது குதித்து தற்கொலைக்கு முயற்சிப்பது போல் காட்சியுடன் தொடங்கும் இப்படம். அப்படி டுவிஸ்ட் ஆன காட்சியை தொடக்கத்திலேயே எந்த ஒரு படத்திலும் அந்த சமயத்தில் இதுவரை கையாண்டதில்லை.

அடுத்து கமல் ரேவதியுடன் நடனம் ஆடுவதும் தான் அவரை காதலிப்பதாக ஒப்புக் கொள்வதுமான காட்சியில் கமல் நடனமாடியே நடித்திருப்பார். முந்தைய காதலியின் மறைவுக்குப் பிறகு மீண்டும் காதலிக்க பயப்படுவதை பொருத்தமாக வெளிப்படுத்தி இருப்பார். இளையராஜாவின் இசையில் மெய்சிலிர்க்க வைத்த அந்த நடன அசைவுகள் பல உள்ளங்களை கொள்ளை கொண்டது.

அபூர்வ சகோதர்கள்: சங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமல் குள்ளமாக நடித்த படம் அபூர்வ சகோதரர்கள் கிராபிக்ஸ் உள்ளிட்டவை பெரிதாக இல்லாத 1989 ஆம் ஆண்டிலேயே கமல் குள்ளமாக நடித்து விட்டார். இதற்கு முன்பு ஒரே ஒரு காட்சியில் மட்டும் புன்னகை மன்னன் படத்தில் கமல் குள்ளமாக சார்லி சாப்ளின் கெட்டப்பில் நடித்திருப்பார். அதை தொடர்ந்து இந்த படம் முழுவதும் குள்ளமாக ஒரு கமல், சகோதரராக மற்றொரு கமல் என இரு வேடங்களில் கலக்கியிருப்பார். தன் தந்தையை கொன்றவர்களை பழிவாங்க அவர் எடுக்கும் முயற்சிகளை சாதாரணமாக சொல்லிவிட முடியாது. இதுவரை எவரும் செய்யாத புது விதமாக ஒவ்வொருவரையும் பழி வாங்குவார் குள்ளமான கமல். மூர்த்தி சிறுசு என்றாலும் கீர்த்தி பெரிசு என்பது போல் இவர் செய்யும் கொலைக்களுக்கு இவர் சகோதரர் ஆகிய மற்றொரு கமல் மாட்டிக் கொள்வார். திரில்லர் கலந்த காமெடியாக செல்லும் இப்படத்தை யாராலும் மறக்க முடியாது.

Also Read : கமல் சூதானமாய் வேண்டாம் என தூக்கி எறிந்த 5 இயக்குனர்கள்.. அஜித் பிரண்டுக்கு இப்படி ஒரு நிலைமையா

மைக்கேல் மதன காமராஜன்: சங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமல் திரைக்கதையில் கிரேஸி மோகன் வசனங்களால் பட்டைய கிளப்பிய படம் மைக்கேல் மதன காமராஜன். வேறு வேறு சூழ்நிலைகளில் வளர்ந்த நான்கு சகோதரர்கள் நான்கு விதமான தோற்றத்துடனும் வெவ்வேறு பேச்சு பானியிலும் கமல் தானே கலக்கியிருப்பார். கரகரப்பான வாயிஸ், லண்டன் இங்கிலீஷ், பாலக்காட்டு பிராமின் தமிழ் மற்றும் மெட்ராஸ் பாஷை என்று நான்கு கமலுக்கும் வெவ்வேறு பாடி லாங்குவேஜ் மற்றும் வாய்ஸ் டெலிவரி கொடுத்து அசத்தி இருப்பார். படத்தின் கிளைமாக்ஸில் சேசிங் காட்சியும் மலை உச்சியில் உள்ள வீட்டில் நடக்கும் சண்டை காட்சியும் ஆங்கில படம் போல் சித்தரிக்கப்பட்டு இருந்தாலும் சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும்.

வெற்றி விழா: பிரதாப் போத்தன் இயக்கத்தில் கமல், பிரபு, குஷ்பூ, அமலா, சசிகலா, ராதாரவி நடித்த படம் வெற்றி விழா. சிவாஜி புரொடக்ஷன் தயாரித்த இத்திரைப்படம் ஒரு ஆங்கில நாவலின் தழுவல் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு ஆக்சன் மற்றும் மசாலா படமாக திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்திருப்பார்கள். வில்லனாக சலீம் கவுஸ் கொள்ளை கும்பலில் ஸ்டீபன் ராஜாக ஊடுருவி ஒரு ரகசிய போலீஸ் அதிகாரியாக கமல் நடித்திருப்பார். எல்லாம் மறந்து போன நிலையில் சசிகலாவுடன் நிச்சயமாகி தான் யார் என்று கண்டுபிடிக்க சென்னை வருவார் கமல். பிரபு, குஷ்பூவுடன் நட்பாகி, சாமியாரைக் காப்பாற்றி, தான் யார் என்பதையும் கண்டுபிடிப்பார் கமல். பல டுவிஸ்ட் அடித்து இப்படத்தை ஆங்கில படம் மாதிரி அமைத்து இருப்பார்கள்.

Also Read : உருவ கேலிக்கு ஆளான முதல் நடிகர்.. உச்ச கட்ட அவமானத்தை சந்தித்த கமல் நண்பர்

Trending News