புதன்கிழமை, ஜனவரி 15, 2025

டிஆர்பி-யில் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல்கள்.. வெறித்தனமாக போட்டிபோடும் சன், விஜய் டிவி

சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியலை நாள்தோறும் தவறாமல் பார்க்கின்றனர் என்பதை அந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கை வைத்து தெரிந்துவிடும். அந்தவகையில் இந்த வாரம் ரசிகர்கள் தவறாமல் பார்த்த சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல் தற்போது இணையத்தில் வெளியாகி சின்னத்திரை ரசிகர்களின் கவனம் பெற்றிருக்கிறது.

இதில் வழக்கம்போல் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல்தான் டாப் இடத்தை பிடித்திருக்கிறது. கயல் சீரியல் சீரியல் துவங்கப்பட்ட நாளிலிருந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

2-வது இடம் அதே சன் டிவியின் அண்ணன் தங்கை பாசத்தை அழகாக காண்பிக்கும் வானத்தைப்போல சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. 3-வது இடம் கண்ணான கண்ணே சீரியலுக்கும், 4-வது இடம் சுந்தரி சீரியலுக்கும் கிடைத்திருக்கிறது. அதைப்போல் 5-வது இடம் ரோஜா சீரியல் பெற்றிருக்கிறது.

இப்படி தொடர்ந்து 5 இடங்களை அசால்டாக பிடித்திருக்கும் சன் டிவி சீரியல், மற்ற எந்த சேனல்களையும் உள்ளே விடாமல் டிஆர்பியை அடித்து நொறுக்குகிறது. அதுமட்டுமின்றி நல்ல கதையம்சம் கொண்ட கதைகளை தேர்வு செய்து ஒளிபரப்புவது மூலம் சன் டிவி சின்னத்திரை ரசிகர்களை தன்வசப்படுத்தி இருக்கிறது.

இதைப் போன்று சன் டிவிக்கு சளைத்தவர்கள் அல்ல என வெறித்தனமாக போட்டிபோடும் விஜய் டிவியும் தரமான சீரியல்களை தரையிறக்கி கொண்டிருக்கிறது.  இதனால் விஜய் டிவியின் விடாமுயற்சியால் டிஆர்பி ரேட்டிங்கில் 6-வது இடத்தை பாக்கியலட்சுமி சீரியல் பிடித்திருக்கிறது.

இந்த சீரியலில் ரசிகர்கள் என்னென்ன நடக்க வேண்டும் என நினைத்தார்களோ, அதை எல்லாம் கடந்த சில நாட்களாக நடந்து கொண்டு இருப்பதால் இந்த தொடரை தவறாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.  மீண்டும் 7-வது இடத்தை சன் டிவியின் எதிர்நீச்சல் பிடித்திருக்கிறது. 8-வது இடம் மறுபடியும் விஜய் டிவி பாரதிகண்ணம்மா சீரியல் வெற்றி கிடைத்திருக்கிறது.

வழக்கம்போல் எப்போதும் டிஆர்பி-யில் முன்னிலை வகிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இந்தமுறை பின்னுக்குத் தள்ளப்பட்டு 8-ம் இடத்தில் இருக்கிறது. 9-வது இடம் சன் டிவியின் அவளும் நானும் சீரியல் பெற்றிருக்கிறது. இதில் இரண்டு குழந்தைகள் தங்களது அட்டகாசமான நடிப்பை வெளிக் காட்டுகின்றனர். மேலும் 10-வது இடம் விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியல் பெற்றிருக்கிறது.

Trending News