திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஜெயிலர் பட மீதான நம்பிக்கையால் துணிந்து மோதும் சன் பிக்சர்ஸ்.. சொந்த ஊரில் ஆட்டம் போட ரெடியாகும் ரஜினி

Rajini In Jailer Movie: நெல்சன் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு ஏற்ப படுஜோராக ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து இப்படத்தை பார்த்து கொண்டாடுவதற்காக அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில்  ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

அந்த நாளில் தான் எங்களுக்கு நிஜமான தீபாவளி என்று ரசிகர்கள் இப்பொழுதிலிருந்து ஆர்ப்பரித்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளையும் ஒரு யுகமாக ரஜினியின் ரசிகர்கள் கழித்துக் கொண்டு அந்த திருநாளுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இவர்களுக்கு ஒரு சோக செய்தியாக தலையில் இடியாய் விழுந்திருக்கிறது.

Also read: இது என்ன ரஜினிக்கு வந்த சோதனை.. ஜெயிலர் படத்தால் சூப்பர் ஸ்டாரை தேடி வந்த பெரும் சிக்கல்

அதாவது இப்படத்தை எப்பொழுது பார்க்கலாம் என்று காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று அதிகாலை காட்சியை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ரஜினியின் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் உள்ளார்கள். இதற்கு தயாரிப்பாளர் நினைத்திருந்தால் ரஜினி படத்திற்கு விளக்கு வாங்கி இருக்கலாம்.

ஆனால் அவர்கள் அது எதையும் செய்யாமல் எல்லாருக்கும் ரூல்ஸ் ஒன்று தான். என நினைத்து ரஜினி படத்திற்கும் அதிகாலை காட்சியை ரத்து செய்திருக்கிறார்கள். அதற்கு காரணம் அதிகாலை ஷோ இருந்தால் பெரும்பாலான யூடியூப்பர்கள் சீக்கிரமாக பார்த்துட்டு வந்து தேவையில்லாத தவறான கருத்துக்களை பரப்பி விடுவார்கள்.

Also read: ரஜினியை சந்தோஷப்படுத்த விஜய்யை அசிங்கப்படுத்திய தமன்னா.. இனி உங்களுக்கு வாய்ப்பு இல்ல அம்மணி

இதனால் தான் மொத்தமாக அதிகாலை காட்சியை வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்திருந்தார்கள். அதேதான் ஜெயிலர் படத்திற்கும் கடைப்பிடித்து வருகிறார்கள். ஆனால் இந்த ரூல்ஸ் தமிழ்நாட்டுக்கு மட்டும்தான். ஏனென்றால் ஜெயிலர் படம் ரஜினியின் சொந்த ஊரான கர்நாடகாவில் காலை 5 மணிக்கு ரிலீஸ் ஆகப்போகிறது.

அதேபோல் வெளிநாட்டில் இந்திய நேரப்படி அதே நாளில் 5 மணிக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். மேலும் இப்படி ரிலீஸ் செய்வது படம் நன்றாக இல்லாவிட்டால் விமர்சன ரீதியாக பல பேச்சுக்கள் அடிபடும். ஆனால் அதையெல்லாம் தாண்டி சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் படத்தின் மீது உள்ள நம்பிக்கையால் துணிந்து மோத தயாராக இருக்கிறது.

Also read: ரஜினி நடிக்க மறுத்த படத்தை நடித்துக் காட்டிய ரசிகன்.. உச்சகட்ட குதூகலத்தில் கும்மாளம் போடும் மொத்த டீம்

Trending News