வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

தனுசுக்கு அண்ணன்களாக நடிக்கும் முரட்டு வில்லன்கள்.. 50வது பட வெற்றிக்காக கொக்கி போட்டு தூக்கிய சன் பிக்சர்ஸ்

தனுஷ் தற்சமயம் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் நிச்சயம் தனுஷுக்கு கம்பேக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார். இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தை தாண்டி தனுஷின் ஐம்பதாவது படத்தின் மீதான எதிர்பார்ப்பு தான் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

தன்னுடைய ஐம்பதாவது படத்தை தனுஷே இயக்க இருக்கிறார். அதுமட்டும்இன்றி பிரம்மாண்ட பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள் இப்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. டாப் நடிகர்களை சன் பிக்சர்ஸ் இந்த படத்திற்காக கொக்கி போட்டு தூக்கி உள்ளது.

Also Read : எல்லாமே அட்டு பிளாப், நீங்கெல்லாம் ஹீரோயின் மெட்டீரியல் இல்ல.. படுதோல்வியை சந்திக்கும் தனுஷ் பட நடிகை

அதன்படி தனுஷுக்கு சகோதரர்களாக இரண்டு முரட்டு வில்லன்கள் களம் இறங்க உள்ளனர். அதாவது எஸ்ஜே சூர்யா மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் தனுஷுக்கு அண்ணனாக நடிக்கிறார்களாம். இப்போது இவர்கள் இருவருமே படத்தில் வில்லனாக மிரட்டி வருவதால் இந்த படத்திலும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

அதுவும் எஸ்ஜே சூர்யாவுக்கு மாநாடு படத்திற்கு பிறகு மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது. டாப் ஹீரோக்களின் படங்களில் எல்லாம் எஸ்ஜே சூர்யா தான் வில்லனாக நடித்து வருகிறார். அந்த வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படத்தில் நடிக்க கூட எஸ்ஜே சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Also Read : ஜெயம் ரவி நடித்ததால் தான் படம் பிளாப்.. தனுஷ் நடித்திருந்தால் படம் ஹிட் ஆயிருக்கும்

இந்நிலையில் தனுஷ் ஐம்பதில் எஸ்ஜே சூர்யா மற்றும் சந்தீப் கிஷன் போன்ற நடிகர்களுடன் விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் போன்ற பிரபலங்களும் இப்படத்தில் நடிப்பது உறுதி ஆகி இருக்கிறது. இவ்வாறு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே தனுஷ் ஐம்பதில் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாகத்தான் இருக்கிறது.

அதுமட்டுமின்றி தனுஷின் திரை வாழ்க்கையில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தனுஷ் டைரக்ஷனில் இறங்கி உள்ளதாலும், தன்னுடைய படத்தையே அவர் இயக்குவதால் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

Also Read : மலையாளத்திலும் கல்லா கட்ட பார்க்கும் தனுஷ்.. 100 கோடி வசூல் படத்தை வளைத்து போட திட்டம்

Trending News