Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

உதயநிதி இடம் தோற்றுப் போன கலாநிதி மாறன்.. சன் பிக்சர்ஸால் முடியாததை செய்து காட்டிய ரெட் ஜெயண்ட்

உதயநிதி இடம் தோற்றுப் போன கலாநிதி மாறன்.. சன் பிக்சர்ஸால் முடியாததை செய்து காட்டிய ரெட் ஜெயண்ட்

ரெட் ஜெயண்ட் உதயநிதியிடம் இந்த ஒரு விஷயத்தில் தோற்றுப் போன சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்.

Sun Pictures, Red Giant: கலாநிதி மாறன் எந்த தொழில் தொடங்கினாலும் அதில் தனது தனித்துவமான திறமையால் கால் பதித்து சாதனை படைத்து வருகிறார். ஆனால் ஒரு இடத்தில் மட்டும் அவரால் ஜெயிக்க முடியவில்லை. அதுவும் உதயநிதியிடம் அந்த விஷயத்தில் கலாநிதி தோற்றுப் போய்விட்டார் என்பது தான் மிகவும் ஆச்சரியமான விஷயம்.

கலைஞர் கருணாநிதியின் பேரன்கள் தான் கலாநிதி மற்றும் உதயநிதி ஸ்டாலின். முரசொலி மாறனின் மகனான கலாநிதி சன் குழுமத்தின் நிர்வாகியாக இருக்கிறார். பிரபல தொலைக்காட்சியான சன் டிவியின் உரிமையாளர் இவர்தான். அதோடு மட்டுமல்லாமல் கடந்த 2008 ஆம் ஆண்டு சன் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தை தொடங்கினார்.

முதலாவதாக காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தனது விநியோகத்தை தொடங்கிய சன் பிக்சர்ஸ் அடுத்த அடுத்ததாக பல படங்களை வெளியிட்டனர். ஆனால் இதில் எந்திரன், மங்காத்தா போன்ற சில படங்கள் தான் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மற்ற படங்கள் எல்லாம் காலை தான் வாரிவிட்டது.

ஆகையால் 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு வேறு படங்களை விநியோகம் செய்வதை சன் பிக்சர்ஸ் நிறுத்திக் கொண்டது. ஆனால் தயாரிப்பாளராக தொடர்ந்து இந்நிறுவனம் படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான ரஜினியின் ஜெயிலர் படம் கூட நல்ல வசூலை தான் பெற்று வருகிறது. இந்த சூழலில் வினோதஸ்தராக சன் பிக்சர்ஸ் தோற்றுவிட்டது.

ஆனால் அதன் பிறகு தான் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழ் சினிமாவில் கால் பதித்தது. தயாரிப்பாளராக நிறைய படங்களை கொடுக்கவில்லை என்றாலும் இப்போது விநியோகஸ்தராக கொடி கட்டி பறந்து வருகிறது. அதுவும் தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பான்மையான படங்களை ரெட் ஜெயண்ட் தான் வெளியிட்டு வருகிறது.

மேலும் தயாரிப்பாளர்களுக்கு சரியான கணக்கை முடித்து உடனடியாக பணத்தை கொடுப்பதால் ரெட் ஜெயண்டை நாடி வருகிறார்கள். குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்களை இந்நிறுவனம் தான் வெளியிட்டு வருகிறது. விநியோகஸ்தராக கலாநிதி மாறன் தோற்றாலும் தயாரிப்பாளராக இப்போது சக்கை போடு போட்டு வருகிறார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.