செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பிரளயத்தை ஏற்படுத்திய ரஜினி, லோகேஷ் சர்ச்சை.. போஸ்டரை வெளியிட்டு பிரச்சனையை முடித்து வைத்த சன் பிக்சர்ஸ்

Rajini-Lokesh: நேற்றிலிருந்தே ரஜினி, லோகேஷ் பற்றிய விவகாரம் தான் சோசியல் மீடியாவில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பலரும் இவர்களின் கூட்டணியை ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் அது சந்தேகம் தான் என்று வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

அது மட்டுமல்லாமல் லோகேஷ் சொன்ன ஒரு காட்சியை ரஜினி ஜெயிலர் படத்தில் பயன்படுத்தி விட்டதாகவும் இதனால் அவர் கூட்டணியில் இருந்து விலகியதாகவும் செய்திகள் வெளியானது. பலரையும் அதிர்ச்சி அடைய வைத்த இந்த விவகாரம் சோசியல் மீடியாவில் பரவியதை தொடர்ந்து தற்போது அதற்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.

Also read: என்னது லியோ லோகேஷ் படமே இல்லையா.? த்ரிஷாவால் சல்லி சல்லியான கூட்டணி

அதாவது சன் பிக்சர்ஸ் தற்போது தலைவர் 171 பட அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக போஸ்டர் உடன் வெளியிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் அனிருத் இசையில் இப்படம் உருவாக இருக்கிறது. அதுதான் இப்போது மீடியாவில் வைரலாகி வருகிறது.

இப்படி திடீரென்று அறிவிப்பு வெளிவந்திருந்தாலும் உண்மையில் இது சரியான நேரம் தான். ஏனென்றால் தற்போது கிளம்பிய இந்த சர்ச்சையால் ரஜினியின் பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆகி இருந்தது. அதற்கு முடிவு கட்டும் வகையில் சன் பிக்சர்ஸ் இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டு இருக்கிறது.

Also read: லியோ படத்தில் கைவச்ச சென்சார் போர்டு.. தலைவலியில் லோகேஷ், விஜய் கூட்டணி

அந்த வகையில் சூப்பர் ஸ்டாரின் அடுத்தடுத்த பட அறிவிப்பு வெளியாகி வருவது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. தற்போது ஜெயிலர் மூலம் மாபெரும் வெற்றியை ருசித்திருக்கும் ரஜினி அடுத்ததாக ஜெய் பீம் இயக்குனர் ஞானவேலுடன் இணைய இருக்கிறார்.

அதை முடித்த கையோடு லோகேஷ் பட சூட்டிங் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. தற்போது லியோ பட ரிலீஸில் பிசியாக இருக்கும் அவர் விரைவில் தலைவர் 171-க்கான ஆரம்பகட்ட வேலையை தொடங்க இருக்கிறார். அந்த வகையில் இப்படம் அடுத்த வருட தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தலைவர் 171 போஸ்டர்

thalaivar171-poster
thalaivar171-poster

Trending News