புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

முதல் மரியாதை ராதாவாக மாறிய கருப்பழகி.. சன் டிவி நடிகையின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்

பல வருடங்களாக தனக்கென ஒரு இடத்தை பிடித்து மக்களை கட்டுக்குள் வைத்திருக்கும் சன்டிவி இப்போது புதுப்புது நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறது. அதேபோன்று சன் டிவியின் சீரியல்கள் தான் வழக்கம் போல டிஆர்பி யிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் சன் டிவி பிரபலம் ஒருவர் நடத்திய லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் ரசிகர்களை கவர்ந்திருந்தாலும் சுந்தரி சீரியலுக்கு ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த சீரியலின் நாயகியாக நடித்து வரும் கேப்ரில்லாவுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். சோசியல் மீடியாவின் மூலம் பிரபலமான இவர் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ஐரா திரைப்படத்தில் சிறு வயது நயன்தாராவாக நடித்திருப்பார்.

Also read: அனல் பறக்கும் இந்த வார டிஆர்பி ரேட்டிங்.. டாப் 6 இடத்தை ஆக்கிரமித்த ஒரே சேனல்

அதன் பிறகு மலையாளம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கும் இவருக்கு சுந்தரி சீரியல்தான் மிகப்பெரும் அடையாளத்தை கொடுத்தது. பொதுவாகவே கருப்பாக இருக்கும் பெண்களுக்கு நடிக்கும் வாய்ப்பு அவ்வளவாக கிடைக்காது. இது போன்ற பல தடைகள் வந்தாலும் கேப்ரில்லா தற்போது தன் திறமையால் ஜெயித்துக் காட்டி இருக்கிறார்.

ஜாக்கெட் அணியாமல் போஸ் கொடுத்த கேப்ரில்லா

gabrella-sun-tv-actress
gabrella-sun-tv-actress

இதை அவர் அவ்வப்போது ஒரு விழிப்புணர்வாகவும் கூறுவது உண்டு. அந்த வகையில் இவர் தற்போது நடத்தி இருக்கும் ஒரு போட்டோ சூட் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. அதில் அவர் முதல் மரியாதை பட ராதா போல் ஜாக்கெட் அணியாமல் புடவை மட்டும் அணிந்து போஸ் கொடுத்திருக்கிறார்.

Also read: விசுவின் சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்கப் போகும் எஸ் ஏ சி.. கொல காண்டில் விஜய்

அது மட்டுமல்லாமல் அதில் அவர் ஒரு பதிவையும் போட்டிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, எனது ஆடையை வைத்து தான் என்னை நீங்கள் மதிப்பிடுவீர்கள் என்றால் அந்த தேர்வில் நான் தோற்றாலும் எனக்கு சந்தோசம் தான் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவர் பதிவிட்டு இருந்த மற்றொரு வாசகம் தான் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

கேப்ரில்லா லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்

gabrella-actress
gabrella-actress

அதாவது சுருங்க போகும் தோலுக்கு ஓராயிரம் விமர்சனங்கள் இருக்கிறது. சுருங்கிய பிறகும் என்னுடைய சுதந்திரம் தொடரும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலம் அவர் நிறம் குறித்து வரும் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். தற்போது அவர் பதிவிட்டு இருக்கும் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் தலைவி முதல் மரியாதை 2 க்கு தயாராகி விட்டார் என்று புகழ்ந்து வருகின்றனர்.

Also read: புது சீரியல் என்ட்ரியால் பாய் பிரண்டுடன் ஓவர் நெருக்கம் காட்டும் ஆல்யா.. அம்மணி சிக்கும் அடுத்த சர்ச்சை

Trending News