சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

டிஆர்பிக்காக தீயாய் வேலை செய்யும் சேனல்கள்.. விஜய் டிவியை ஓரம்கட்டி சாதித்த காட்டிய சன் டிவி

முன்பெல்லாம் சன் டிவியை தவிர வேறு எந்த சேனல்களும் இருக்காது. அதனால் பெரும்பாலான மக்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சியையும் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். ஆனால் இப்போது அப்படி கிடையாது பல புதுப்புது சேனல்களும் உருவாகிவிட்டன.

அந்த வகையில் பல சேனல்களும் மக்களை கவர்வதற்காக பல புது யுக்திகளை களமிறக்கி வருகிறது. அதில் சன் டிவிக்கு அடுத்து விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் போன்ற சேனல்கள் அதிக பிரபலமாக இருக்கின்றன. அவை அனைத்தும் டிஆர்பிக்காக ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள் என்று பல விஷயங்களில் புதுமை காட்டி தீயாக வேலை செய்து வருகின்றது.

இதனால் சன் டிவியும் தன்னுடைய இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள பல புது நிகழ்ச்சிகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது. இருந்தாலும் சன் டிவி என்றாலே சீரியல்கள்தான் என்பதற்கேற்ப அதில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் சன் டிவி தான் எப்போதும் டிஆர்பியில் முன்னிலையில் இருந்து வருகிறது. கடந்த சில வருடங்களாக விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்கள் சன் டிவிக்கு போட்டியாக இருந்தது. ஆனால் சமீப காலமாக அந்த சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மிகவும் மொக்கையாக ரசிகர்களுக்கு போர் அடிக்கும் வகையில் இருக்கிறது.

அதனால் தற்போது சன் டிவி மீண்டும் டிஆர்பியில் டாப் ரேட்டிங்கை பிடித்து கெத்து காட்டி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடங்களை பிடித்த சீரியல்களில் 4 சீரியல்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான்.

அதில் கயல் சீரியல் பல மாதங்களாக முதலிடத்தை தக்க வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சுந்தரி சீரியலும், மூன்றாவது இடத்தில் வானத்தைப் போல, நான்காவது இடத்தில் ரோஜா உள்ளிட்ட சன்டிவி சீரியல்கள் முன்னணியில் இருக்கின்றன. இதைத் தொடர்ந்து 5வது இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா இருக்கிறது.

Trending News