Sun Network: கேபிள் என்று சொல்வதை விட சன்டிவி என்று சொல்லியதுதான் அதிகம். அந்த அளவிற்கு சன் டிவி சேனல் மூலை முடுக்குகளில் பெயர் வாங்கி இருக்கிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவிலும் மிக பிரபலமாக இருக்கிறது. அதிலும் சன் டிவி, கே டிவி, சன் நியூஸ் மற்றும் சன் மியூசிக் என தமிழ் மக்களின் ஃபேவரிட் ஆக சன் நெட்வொர்க் ஆக்கிரமித்து வருகிறது.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடக போன்ற மற்ற மாநிலத்திலும் டாப் 10 சேனல்களில் ஒன்றாக இடம் பிடித்திருக்கிறது. இது தொலைக்காட்சிகளுக்கு மட்டும் அல்ல சன் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் கலாநிதி மாறன் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, விஜய் போன்ற டாப் ஹீரோக்களை வைத்து படங்களையும் தயாரித்து பாக்ஸ் ஆபிஸில் கொடி கட்டி பறந்து வருகிறார்.
இப்படி சன் குழுமம் அடுத்தடுத்த லெவலுக்கு முன்னேறி நம்பர் ஒன் தொழிலதிபராக கலாநிதி மாறன் சன் குடும்பத்தை பெருக்கெடுத்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக புது சேனல் அறிமுகப்படுத்த போவதாக தகவல் வெளியாயிருக்கிறது.
புது பிசினஸில் இறங்கிய சன் நெட்வொர்க்
அதாவது ஹாலிவுட் படங்களை பார்ப்பதற்கு மக்கள் எப்பொழுதுமே தத்தளித்துக் கொண்டு வருவார்கள். அதுவும் ஹாலிவுட் படங்களை தமிழில் டப்பிங் செய்து அதை பார்ப்பதற்கு என்று ஒரு கூட்டமே இருக்கிறது. அதற்கு காரணம் ஹாலிவூட் படங்களை ஆங்கிலத்தில் பார்ப்பதைவிட தமிழில் பார்த்தால் மிக நகைச்சுவையாக வித்தியாசமான வசனங்களில் டப்பிங் செய்ததை பார்த்து ரசிக்க முடியும்.
அந்த வகையில் ஹாலிவுட் படங்களை தமிழில் டப்பிங் செய்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தால் இளைஞர்கள் மட்டும் இல்லை குடும்பத்தில் இருப்பவர்களும் சேர்ந்து அந்த படத்தை பார்த்து ரசிப்பதற்கு ஆர்வம் காட்டுவார்கள். இதனால் இதை முறைப்படி செய்ய சன் குழுமம் தற்போது முடிவெடுத்து இருக்கிறது.
அதற்காக கலாநிதி மாறனின் சன் குழுமம் ஒரு புதிய முயற்சியை எடுக்கப் போகிறார்கள். அந்த வகையில் ஹாலிவுட் படங்களை தொலைக்காட்சியின் மூலம் பார்த்து ரசிப்பதற்காக “சன் ஹாலிவுட்” என்ற சேனலை துவங்குவதற்கு முடிவெடுத்து வைத்திருக்கிறார்கள்.
இந்த சேனலில் 24 மணி நேரமும் ஹாலிவுட் படங்களை தமிழில் டப்பிங் செய்து கொண்டே இருக்கப் போகிறார்கள். இதற்கான முயற்சியில் இறங்கிய சன் குழுமம் ஒவ்வொரு கட்டத்தையும் வெற்றிகரமாக முடித்த நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கூடிய விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.