வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

அவன் விரலை வச்சே அவன் கண்ண குத்தணும்.. விஜய் டிவி டிஆர்பியை குறைக்க சன் டிவி போட்ட வியூகம்

Sun Tv-Vijay Tv: விஜய் டிவி டிஆர்பியை தக்க வைத்துக் கொள்வதற்காக பல புது புது நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதை ஓவர்டேக் செய்ய சன் டிவியும் பல திட்டங்களை இறக்கி கொண்டிருக்கிறது.

அதில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 5 தற்போது ஆரம்பித்துள்ளது. அதற்கு போட்டியாக சன் டிவி டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியை களமிறக்க உள்ளனர்.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் விஜய் டிவியின் குக் வித் கோமாளி மொத்த செட்டும் இங்கு வந்திருக்கிறது. அதன்படி வெங்கடேஷ் பட், தீபா அக்கா, சூப்பர் சிங்கர் பரத், ஜி பி முத்து என பலரும் சன் டிவி பக்கம் வந்துள்ளனர்.

அதற்கான ப்ரோமோ தற்போது வெளியான நிலையில் பலருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் தான். எப்போதுமே சன் டிவி இது போன்ற நிகழ்ச்சிகளை காப்பியடிப்பது வழக்கம் தான்.

விஜய் டிவிக்கு டஃப் கொடுக்கும் சன் டிவி

ஆனால் இதை நிச்சயம் யாரும் எதிர்பார்க்கவில்லை. மேலும் விஜய் டிவி அளவுக்கு இந்த நிகழ்ச்சியை சன் டிவி வெற்றிகரமாக கொண்டு செல்லுமா என்ற சந்தேகமும் ஒரு பக்கம் இருக்கிறது.

அது மட்டுமின்றி எப்படி இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதன்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் சன் டிவி பக்கம் தற்போது வந்திருக்கிறார்.

அதனாலேயே தைரியமாக இந்த சமையல் நிகழ்ச்சியை அதே கான்செப்ட் உடன் இறக்கி உள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியின் டிஆர்பியை குறைக்க சன் டிவி இப்படி ஒரு வியூகம் போட்டுள்ளது.

ஆனால் சீரியலுக்கு பெயர் போன இந்த சேனல் ரியாலிட்டி ஷோவில் வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறி தான். ஆனாலும் நிகழ்ச்சி சுவாரசியமாக இருந்தால் நிச்சயம் இது சாத்தியம் தான்.

Trending News