செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

Kayal: பெரியப்பாவோட கூட்டு சேர வில்லி அத்தை வந்தாச்சு.. கயலுக்கு பார்சலில் வந்த அடுத்த பிரச்சினை

Kayal: சன் டிவியின் கயல் சீரியல் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. ஆனால் சமீப காலமாக இயக்குனர் எப்படி கதையை கொண்டு செல்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்.

அதனாலேயே புது புது கேரக்டர்களாக கொண்டு வந்து எதையோ உருட்டுகிறார். அப்படித்தான் தற்போது கயலுக்கு இன்னொரு பிரச்சினை பார்சலில் வந்திருக்கிறது.

அது என்னவோ சீரியல் ஹீரோயின் என்றாலே பிரச்சனையை தாங்கும் தியாகிகளாகவே இருக்கின்றனர். அதிலும் கயல் நாயகி பிரச்சனையை பெட்ஷீட்டாகவே போட்டு தூங்குகிறார்.

கயலுக்கு வந்த பிரச்சனை

அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் புது வில்லியை அறிமுகப்படுத்தி இருக்கின்றனர். அவர் யார் என்றால் கயலின் சொந்த அத்தை தான்.

ஏற்கனவே பெரியப்பா கொடுக்கும் டார்ச்சர் போதாது என்று இந்த அத்தையும் அவருடன் கூட்டு சேர வந்துள்ளார். ஒரு பக்கம் நிச்சயதார்த்த வேலையில் கயல் மகிழ்ச்சியாய் இருக்க அதை கெடுக்கும் வகையில் புது ட்விஸ்ட் வந்திருக்கிறது.

ஆனாலும் இந்த ப்ரோமோ பெரிய எதிர்பார்ப்பை ஒன்றும் ஏற்படுத்தவில்லை. ஏற்கனவே பிரச்சனைகளின் கூடாரமாக இருக்கும் இந்த சீரியலில் இது வேறயா என சலிப்பை தான் கொடுத்துள்ளது.

Trending News