விஜய் டிவி நடிகையை தட்டி தூக்கிய சன் டிவி.. அனல் பறக்க போகும் டிஆர்பி

Vijay TV – Sun TV : ஒவ்வொரு வாரமும் பல படங்கள் திரையரங்குகளில் வெளியானாலும் வீட்டில் இருந்து தினமும் சின்னத்திரை தொடர்களை பார்க்க தான் இல்லத்தரசிகள் ஆர்வமாக காட்டி வருகிறார்கள். அதற்கேற்றார் போல் தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு புது தொடர்களை ஒளிபரப்பி வருகின்றனர்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே தொடரில் சுவாதி மற்றும் கேப்ரில்லா இருவரும் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். இதில் கேப்ரில்லா விஜய் டிவியில் ஒளிபரப்பான 7ஜி தொடரின் மூலம் தனது நடிப்பை தொடங்கினார். நடனத்தின் மீது ஆர்வமுள்ள கேப்ரில்லா நடிப்பிலும் பட்டையை கிளப்பி வருகிறார்.

மேலும் இன்ஸ்டால் அவர் போடும் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது. இதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். ஈரமான ரோஜா 2 தொடரில் நடித்து வந்த நிலையில் அந்தத் தொடர் முடிவு பெற்று இருக்கிறது.

இதை தொடர்ந்து சன் டிவியில் புதிய தொடர் ஒன்றில் கேப்ரில்லா ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த தொடரில் அவருக்கு ஜோடியாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கண்ணான கண்ணே தொடரில் கதாநாயகனாக நடித்த ராகுல் ரவி நடிக்க இருக்கிறார். கண்ணான கண்ணே தொடரின் மூலம் அதிகப் பெண் ரசிகர்களை ராகுல் ரவி கொண்டிருந்தார்.

இப்போது மீண்டும் சன் டிவியில் புதிய தொடரில் ராகுல் ரவி நடிப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தொடருக்கான பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. டைட்டிலுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →