Sun Tv: திருமணம், விவாகரத்து எல்லாம் இப்போது இருக்கும் நடிகைகளுக்கு சர்வ சாதாரணமாக போய்விட்டது. பொதுவாகவே ஹீரோயின்கள் எல்லாம் இப்படித்தான் என்ற ஒரு பிம்பம் மக்கள் மத்தியில் இருக்கிறது.
அதற்கேற்றார் போல் சமீப காலமாக அதிக விவாகரத்து செய்திகளை கேட்கிறோம். உடனே அந்த பிரபலம் மறுமணத்திற்கு தயாராகி விட்டார் என்ற செய்திகளும் வருவதுண்டு.
அப்படித்தான் வெங்கட் பிரபுவின் உன்னை சரணடைந்தேன் இன்னும் சில படங்களில் நடித்த மீரா வாசுதேவனுக்கு தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது. இது அவருக்கு மூன்றாவது கல்யாணம் ஆகும்.
ஒளிப்பதிவாளரை மணந்த மீரா வாசுதேவன்
ஏற்கனவே விஷால் என்பவரை திருமணம் செய்த இவர் கருத்து வேறுபாடின் காரணமாக விவாகரத்து செய்தார். அதை அடுத்து வீரம், சார்பட்டா பரம்பரை படங்களில் நடித்த வில்லன் நடிகர் ஜான் கொக்கேனை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் அதுவும் விவாகரத்தில் தான் முடிந்தது. அதை அடுத்து சீரியல்களில் இவர் கவனம் செலுத்தி வந்தார். சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி 2 சீரியலிலும் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது மலையாள சீரியலில் நடித்து வரும் இவர் ஒளிப்பதிவாளர் விபினை நெருங்கிய உறவுகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த மே 21ஆம் தேதி இவர்கள் திருமணம் நடந்த நிலையில் அந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.
சமீபத்தில் வைரலான புகைப்படங்கள்
- கிளாமரில் தமன்னா விட ஒரு படி மேலே செல்ல தயாராகும் கீர்த்தி சுரேஷ்.. பணம் பத்தும் செய்யும் புகைப்படங்கள்
- தொப்பையை குறைத்த அஜித்.. 12 கிலோ குறைத்து வெளியான அடுத்த பட கெட்டப்
- என் டிரஸ், என் இஷ்டம் உனக்கென்ன.. குறை சொல்றவங்க வாயை அடைத்த அஜித்தின் ரீல் மகள்