புதன்கிழமை, ஜனவரி 8, 2025

Sun Tv: CWC 5-யை ஓரங்கட்ட வரும் டாப் குக்கு டூப் குக்கு.. போட்டியாளர்களின் முழு விவரம் இதோ

Sun Tv: விஜய் டிவியில் பல சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கவலைகளை மறந்து சந்தோசமாக சிரிக்க வைத்த இந்த ரியாலிட்டி ஷோ டிஆர்பி-யிலும் முன்னிலை வகித்தது.

தற்போது அதற்கு போட்டியாக சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது. சில வாரங்களாகவே இதன் ப்ரோமோ கலை கட்டிய நிலையில் இன்று முதல் எபிசோட் ஆரம்பித்துள்ளது.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் பிரபலங்களை பற்றி இங்கு காண்போம். அதன்படி வெள்ளித்திரை நாயகியாக கலக்கிய சோனியா அகர்வால் இதில் போட்டியாளராக பங்கு பெறுகிறார்.

டாப் குக்கு டூப் குக்கு

அடுத்ததாக அஜித்தின் வில்லன், டிடி ரிட்டன்ஸ் போன்ற படங்களில் வில்லனாக கலக்கிய FEFSI விஜயன் களமிறங்கியுள்ளார். அடுத்து வில்லன் நடிகர் சாய் தீனா, பிளாக் ஷீப் சேனலில் நடிகராக கலக்கும் நரேந்திர பிரசாத் ஆகியோரும் போட்டியாளர்களாக இறங்கியுள்ளனர்.

மேலும் கயல் சீரியல் நாயகி சைத்ரா ரெட்டி, நடிகை சுஜாதா சிவகுமார், இயக்குனரும் நடிகருமான சிங்கம் புலி, விஜே ஷாலி நிவாகஸ், பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா ஆகியோரும் போட்டியாளர்களாக இருக்கின்றனர்.

இப்படியாக ஒன்பது பிரபலங்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் மற்றொரு சர்ப்ரைசும் இருக்கும் என கூறுகின்றனர். அதன்படி சண்டே கலாட்டாவாக இந்த நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.

இது குக் வித் கோமாளி அளவுக்கு இருக்குமா அல்லது டிஆர்பியில் சரியுமா என்பது அடுத்தடுத்த எபிசோடுகளில் தான் தெரிய வரும். ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் இந்நிகழ்ச்சிக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.

Trending News