வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

டிஆர்பியில் அதகளம் செய்த சன் டிவி.. பரிதாபத்திற்குரிய நிலையில் பிரபல சேனல்

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகளில் சின்னத்திரை தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பாகும் தொடர்களில் அதிகம் பார்க்கப்பட்ட தொடர்களுக்கு டிஆர்பி ரேட்டிங் கொடுக்கப்படும்.

அந்த வகையில் சென்ற வார ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பி ரேட்டிங் வெளியாகியுள்ளது. பெரும்பாலான நேரங்களில் விஜய் டிவியின் தொடர்கள் தான் முதல் இரண்டு இடத்தை பிடிக்கும். ஆனால் தற்போது சன் டிவி முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளது.

Also Read :கண்ணம்மா நெத்தி பொட்டில் துப்பாக்கி.. எதிர்பாராத ட்விஸ்ட்

அதாவது கேப்ரில்லா நடித்து வரும் சுந்தரி தொடர் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஏனென்றால் இந்த வாரம் சுந்தரி தொடர் விறுவிறுப்பான கதை களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. இரவு 7 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து ஆதரவு கிடைத்து விடுகிறது.

இரண்டாவது இடத்தையும் சன் டிவியின் பிரபல தொடரான கயல் தொடர் பெற்று உள்ளது. இத்தொடர் வந்து குறுகிய காலம் ஆனாலும் ரசிகர்களின் ஃபேவரிட் தொடராக மாறி உள்ளது. மூன்றாவது இடத்தை தற்போது சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் பெற்றுள்ளது.

Also Read :2ம் திருமணத்திற்கு அம்மாவை அழைத்த கோபி.. யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்

இதில் கோபி, ராதிகா திருமணம் எப்போது என எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ளனர். நான்காவது இடத்தை சன் டிவியில் ஒளிபரப்பாகி ரோஜா சீரியல் பெற்றுள்ளது. நீண்ட நெடுந்தொடராக ஒளிபரப்பாகி ரோஜா தொடர் எப்போதுமே டிஆர்பியில் ஐந்து இடங்களில் இடம்பெற்று விடும்.

கடைசியாக ஐந்தாவது இடத்தை விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடர் பெற்றுள்ளது. தற்போது பீஸ்ட் பட ரேஞ்சுக்கு பாரதியின் மருத்துவமனையில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளனர். இதனால் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு இத்தொடரில் காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் கடந்த வாரம் சன் டிவி விஜய் டிவியை பின்னுக்கு தள்ளி டிஆர்பியில் அதகளம் செய்துள்ளது.

Also Read :ரொமான்ஸில் பின்னி பெடலெடுக்கும் ராஜா ராணி 2.. படங்களை மிஞ்சும் முத்தங்கள் ?

Trending News